ஏலக்காய் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

225

ஏலக்காய் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

டீ, காபி, கிரீன் டீ, லெமன் டீ என்று பல டீ குடித்திருப்போம். ஆனால், ஏலக்காய் டீ பற்றி கூட கேள்வி பற்றியிருப்போமா? என்றால் ஒரு சிலர் நன்கு அறிந்திருப்பர். ஆனால், பெரும்பாலானோர் டீ கடைக்கு சென்று வெறும் டீ மட்டுமே குடித்து வந்திருப்பார்கள். ஆனால், அதன் மூலம் எத்தனை கெடுதல் வருகிறது என்று அவர்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டால் வளமோடு வாழலாம்.

பொதுவாக பிரியாணி என்று எடுத்துக் கொண்டால் பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி இதையெல்லாம் பயன்படுத்துவோம். பொங்கல் என்றால், உலர்ந்த திராட்சை, முந்திரி பருப்பு, ஏலக்காய் பயன்படுத்துவோம். இப்படி முக்கியமான சமையலுக்கு மட்டுமே ஏலக்காயை நாம் பயன்படுத்தி வருகிறோம். அது போன்று டீ குடிப்பதற்கு ஏலக்காயை பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஏலக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, பி, சி, ஆகியவை அதிகளவில் உள்ளன. ஏலக்காய் டீயை அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஏலக்காய் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

  1. ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
  2. நுரையீரலில் இரத்த ஓட்டம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் குறைய  ஏலக்காய் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
  3. தலைவலி பிரச்சனைக்கு ஏலக்காய் பயன்படுகிறது. தலைவலி இருக்கும் போது ஒரு சிறிய துண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று திண்றால் தலைவலி குணமாகும்.
  4. செரிமான கோளாறு பிரச்சனைக்கு ஏலக்காய் டீ குடித்து வந்தால் செரிமான கோளாறு சரியாகும்.
  5. இதய நோய் பிரச்சனைக்கு ஏலக்காய் டீ குடிப்பது நல்லது.
  6. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஏலக்காய் டீ குடிப்பது நல்லது. மேலும், உடலில் நல்ல மாற்றமும் ஏற்படும்.