ஓமம் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

48

ஓமம் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

ஓமத்தினை நீரில் கொதிக்க வைத்து சிறிதளவு கருப்பட்டி சேர்த்து காலையில் குடித்து வந்தால் உடல் நன்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஓம திரவம் செய்வது எப்படி? வெறும் கடாயில் கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து வறுக்க வேண்டும். நன்கு பொரியும் வரை வறுக்க வேண்டும். மிதமான சூட்டில் வைத்து வறுக்க வேண்டும். பின்பு அதோடு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அரை கப் தண்ணீர் கால் கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடுங்கள்.

பெரியவர்கள் ஓமத் திரவத்தை அப்படியே அருந்தலாம், சின்ன குழந்தைகளுக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்த வைக்கலாம்.

சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம்.

காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும்.

ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.

வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.

சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் ஓமம் பயன்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம்.

வயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்கும் ஓமம் மிகவும் உதவியாக இருக்கும்.