ஔவையார் நோன்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

142

ஔவையார் நோன்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி, அரிசியை உலர்த்தி, மிக்ஸியில் அரைக்கவும். 2 கப் நீர்விட்டு மாவை வேகவிடவும். வெந்ததும் கைகளால் பிடித்துக் கொழுக்கட்டைகளாகச் செய்து இட்லித்தட்டில் வாழை இலையில் எண்ணெய் தடவி வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை இரவில் இந்தக் கொழுக்கட்டை செய்து படைப்பர். இதை ஆண்கள் பார்க்கவும் கூடாது.