கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல் ரெசிபி செய்வது எப்படி?

108

கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல் ரெசிபி செய்வது எப்படி?

தேவையானவை: கடலைப்பருப்பு – ஒரு கப், துருவிய தேங்காய் – கால் கப், துருவிய வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் –  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முதலில் கடலைப்பருப்பை குழையாமல் வேகவைத்துக் கொள்ள வேண்டும். வெந்த பருப்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு சூடாக இருக்கும்போதே துருவிய வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளற வேண்டும். கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல் தயார்.

குறிப்பு: கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று இந்தச் சுண்டலைச் செய்து ஹயக்ரீவருக்குப் படைத்து, குழந்தைகளுக்கு அதைக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.