கடைகளில் ஊறுகாய் சாப்பிட்டால் இந்த பாதிப்புகள் வரும்!

233

கடைகளில் ஊறுகாய் சாப்பிட்டால் இந்த பாதிப்புகள் வரும்!

கடைகளில் ஊறுகாய் வாங்கி சாப்பிட்டால் அல்சர் மற்றும் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். நமது முன்னோர்கள் எப்போதும் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள். வளர்ந்து வரும் காலகட்டத்தில் வீட்டில் சமையல் செய்து சாப்பிடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. கடைகளில் என்ன என்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்று யாருக்கும் தெரிவதில்லை. அப்படியிருக்கும் அதைத் தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

உடலுக்கு சத்து தரக்கூடிய காய்கறிகளை குறைத்துவிட்டு அதற்குப் பதிலாக ஊறுகாய் மற்றும் கடைகளில் விற்கப்படும் பொருட்களை அதிகளவில் வாங்கி சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறோம். பெரும்பாலும், நமது முன்னோர்கள், வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய், தக்காளி, பூண்டு, எலுமிச்சை, நார்த்தங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைக் கொண்டு ஊறுகாய் செய்து சாப்பாடு, கூழ் ஆகியவற்றிற்கு எடுத்துக் கொண்டனர். ஆனால், கடைகளில் விற்கப்படும் ஊறுகாய் ஆகியவற்றை வாங்கி சாப்பிடும் போது என்னென்ன பாதிப்புகள் உண்டாகிறது என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஊறுகாயால் ஏற்படும் பாதிப்புகள்:

  1. நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதில் பலவகையான வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறது. மேலும், சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல நெடிய பொருட்களை கலக்கின்றனர்.
  2. கடைகளில் ஊறுகாய் வாங்கி சாப்பிடும் பொழுது, அதில் இருக்கும் காரம் காரணமாக வயிற்றில் வலிகள், வயிற்றுப்போக்கு போன்ற பிரசசனைகள் உண்டாகிறது.
  3. மேலும், ஊறுகாயில் கலக்கப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களை நாம் அதிகளவில் உட்கொள்ளும் போது, அது அல்சர் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  4. ஊறுகாயில் அதிக எண்ணெய் இருப்பதால் கொலஸ்ட்ரால் இருப்பவர்களும் அத்னை சாப்பிடக் கூடாது. மேலும், சர்க்கரை வியாதி உள்ளவர்களும் கடை ஊறுகாயை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

 

இது போன்ற காரணங்களுக்காகவும், பாதிப்புகளுக்காகவும் கடை ஊறுகாய் வாங்கி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கூடுமானவரை வீடுகளில் ஊறுகாய் செய்து சாப்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லையென்றால், ஊறுகாயிக்குப் பதிலாக சத்தான காய்கறிகள், கீரை வகைகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.