கத்தரிக்காய் கொண்டு சட்னி செய்வது எப்படி?

52

கத்தரிக்காய் கொண்டு சட்னி செய்வது எப்படி?

பொதுவாக தக்காளி, வேர்க்கடலை, பொரிகடலை கொண்டு தான் சட்னி செய்து பார்த்திருப்போம். காய்கறிகள் கொண்டு கூட சட்னி செய்யலாம் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் இந்தப் பதிவில் கத்தரிக்காய் கொண்டு சட்னி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 3

உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 5

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

புளி – எலுமிச்சை அளவு

உப்பு – தேவைக்கேற்பு

கடலை எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

விளக்கெண்ணெய் – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

கத்தரிக்காயை விளக்கெண்ணெய் தடவி சுட்டு எடுக்க வேண்டும். அதன் பிறகு தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்தவற்றை பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மசித்த கத்தரிக்காயை போட்டு நன்கு கடைந்து எடுக்க வேண்டும். இப்போது கத்தரிக்காய் சட்னி ரெடி….