கறுப்பு உளுந்து வடை செய்வது எப்படி?

137

பைரவர் கறுப்பு உளுந்து வடை பிரசாதம் செய்வது எப்படி?

பைரவருக்கு செய்யப்படும் விசேஷமான நைவேத்தியங்களில் ஒன்றான கறுப்பு உளுந்து வடை பிரசாதம் செய்வது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

கறுப்பு உளுந்து – 1 கப்

உப்பு – எண்ணெய் – தேவையான அளவு

வெண்ணெய் – 2 ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 ஆர்க்கு

இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை:

கறுப்பு உளுந்தை வெறும் கடாயில் வாசனை வரும் வறுக்க வேண்டும். மிக்ஸியில் கரகரப்பாக (ரவை போன்று) பொடி செய்து கொள்ள வேண்டும். இத்துடன் கறிவேப்பிலை, துருவின இஞ்சி, மிளகுபொடி வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தேவையான தண்ணீர் சேர்ந்து பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடையாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரிக்க வேண்டும். இதையடுத்து, வடையை எடுக்க வேண்டும். இறுதியாக பைரவருக்கு செய்யப்படும் விசேஷமான நைவேத்தியம் தயார். இதனை பைரவருக்கு படைத்து வழிபாடு செய்து அதன் பிறகு மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்.