காசோ, பணமோ தேவையில்லை: முகப்பரு நீக்கும் இயற்கை மருத்துவம்!

214

காசோ, பணமோ தேவையில்லை: முகப்பரு நீக்கும் இயற்கை மருத்துவம்!

யாராக இருந்தாலும் அழகாக இருக்க வேண்டும். முகம் பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். ஆனால், ஒருசிலருக்கு ஆயில் ஃபேஸ் காரணமாகவோ, வெயிலின் தாக்கம் காரணமாகவோ, வயது காரணமாகவோ முகத்தில் முகப்பரு வரும். அப்படி வரும் முகப்பருவை நாம் கிள்ளி கிள்ளி எடுத்தால் அது அதிகமாவதோடு, முகத்தில் குழி விழுந்துவிடும். இதனால், மனம் வருத்தப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். சிலர் அதற்கு உடனடியாக மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்வார்கள். சிலர், இயற்கை முறைகளை பின்பற்றுவார்கள். சிலர், அப்படியே எதுவும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

இந்த நிலையில் தான் முகப்பருவை நீக்க உதவும் இயற்கை மருத்துவம் குறித்து இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். முருகப்பரு நீங்க புதினா இலை சிறந்த மருத்துவ காரணியாக பயன்படுகிறது.

  1. புதினா இலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவலாம்.
  2. வேப்பிலை பொடியுடன் மஞ்சள் சந்தனம் கலந்து பருக்கள் மீது பூசி வரலாம்.
  3. பப்பாளி விழுதுடன் அருகம்புல் சாறு, பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமை மற்றும் முகப்பருக்களை நீக்கும்.
  4. புதினா பொடி, துளசி பொடி, வேப்பிலை பொடி இந்த மூன்றையும் தலா 10 கிராம் வீதம் எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக மறையும். ஆனால், கண்களுக்கு கீழ்ப் பகுதியில் மட்டும் இந்த கலவையை தடவக் கூடாது.
  5. அருகம்புல் பொடி, குப்பைமேனி இலை பொடி இரண்டையும் சம அளவு எடுத்து நீரில் குழைத்து இரவு தூங்குவதற்கு முன்பு பருக்கள் மீது தடவி காலையில் எழுந்து முகத்தை கழுவ வேண்டும். இதனை ஒரு வாரம் செய்து வந்தால் பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.
  6. வெள்ளரிக்காயை அரைத்து அதனை முகத்தில் தடவ வேண்டும். வெள்ளரி குளிர்ச்சி அளிப்பதோடு, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான எண்ணெய்யை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும்.
  7. கஸ்தூரி மஞ்சள், சங்கு, சந்தனம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசினால் முகப்பரு மறையும்.
  8. சின்ன வெங்காயத்தை எடுத்து அதனை பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.
  9. பருக்களின் மேல் துளசி சாறு தடவி வந்தால் பருக்கள் இல்லாமல் மறைந்து போகும்.
  10. தக்காளி, கேரட், வெள்ளரிக்காய், முட்டைக் கோஸ் ஆகியவற்றை அப்படியே பச்சையாக சாப்பிட்டு வர பருக்கள் மறையும்.