கிரீன் தோசை

167

தேவையானவை

பச்சைப்பயறு – 1 கப் சின்ன வெங்காயம் – 5 காய்ந்த மிளகாய் – 2 பூண்டு – 2 சீரகம் – 1 டீஸ்பூன் முந்திரி – 3 உப்பு – சிறிதளவு

செய்முறை

பச்சைப்பயறை இரவே தண்ணீரில் ஊறவைத்து விடவேண்டும். காலையில் ஊறவைத்த பச்சைப்பயறை மிக்ஸியில் போட்டு அதனுடன் மேற்சொன்ன அனைத்தையும் போட்டு, சிறிது உப்பு போட்டு அரைக்கவும். தோசை மாவு பதத்துக்கு மாவை கரைத்துக்கொள்ளவும். சூடான தவாவில், மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். தக்காளி சட்னி, வெங்காய சட்னியுடன் பொருத்தமாக இருக்கும்.

பலன்கள்

புரதம் மற்றும் நுண்ணூட்ட சத்துகள் அதிகமாக உள்ளன. வயிற்றுக்கு நல்லது. காலை நேர போஷாக்கான உணவாக அமையும். தேவையான எனர்ஜி கிடைக்கும். இதையும் படிக்க: குக்கரில் செய்யக்கூடிய 3 வகை ஹோம்மேட் பிஸ்கெட் ரெசிபி…