குனாஃபா

295

அந்த குனாஃக்கு என்று குனாஃபா சேமியா உண்டு அது இங்குள்ள எல்லா சூப்பர் மார்கெட்களிலும் ப்ரோஜன் ஏரியாவில் கிடைக்கும், ஒரு பாக்கெட் விலை 10 திர்ஹம், இந்த குனாஃபாவை பாக்கிஸ்தாணி சேமியாவான ஷீர்குருமா செய்யும் சேமியாவிலும்   நம்ம ஊரில் உருது முஸ்லீம்கள் பாரம்பரியமாக ஈத் பெருநாளுக்கு செய்யும் சுருள் சுருளாக உள்ள  ஷீர் குருமா (பாயாசம்), செய்யும் சேமியாவிலும் செய்யலாம் அதுவும் இல்லாமல் பபிரட்டிலும் சுலபமாக செய்ய்யலாம் .சுவைத்து மகிழுங்கள், செய்து பார்த்தவர்கள் கிழே உள்ள மெயிலுக்கு நீங்கள் செய்து பார்த்த போட்டோவை அனுப்பிவைக்கவும்.  #breadkunafa#Semiyakunafa#Arabic#TraditionalRecipe# குனாஃபா என்பது அரபிக் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று . இதற்கென குனாஃபா சேமியா சூப்பர் மார்கெட்டுகளில் ப்ரோஜன் ஏரியாக்களில் கிடைக்கும்.அது கிடைக்காதவர்கள் நம்ம  ஊரு சேமியாவிலும் செய்யலாம். அப்படியே ப்ரட்டிலும் செய்யலாம். ப்ரட் குனாஃபா  

தேவையான பொருட்கள்

வொயிட் ப்ரட் – 4 ஸ்லைஸ்

லுர் பார்க் பட்டர் – 3 மேசைகரண்டி

பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு – 50 கிராம்

ப்ரெஷ் கிரீம் – ½ டின்

நெஸ்ல் கிரீம் – ½ டின்

சதுர வடிவ அல் மராய் சீஸ் கியுப் – 3 துண்டுகள்

சுகர் சிரப் – தேவையான அளவு சாப்ரான் – 4 அல்லது 5 இதழ் எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி

ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா எசன்ஸ் – ஒருதுளி

செய்முறை புட் ப்ராசசர் அல்லது மிக்சியில் ப்ரட்டை பொடித்து கொள்ளவும். பட்டரை உருக்கி பொடித்த ப்ரட்டில் ஊற்றி பிசறி வைக்கவும். பிசறி வைத்த பிரட்டை இரண்டாக பிரித்து கேக் செய்ய்ம் மோல்டில் பாதி பகுதியை சமபடுத்தி  அழுத்தி வைக்கவும் ஒரு பவுளில் நெஸில் கிரீம், சீஸ் கியுப்,ப்ரஷ் கிரீம் முன்று சீஸையும் மிக்ஸ் செய்து பொடித்து வைத்துள்ள பிஸ்தாவை பாதி அளவு சேர்க்கவும். சிறிது வால்நட்டையும் பொடித்து சேர்க்கவும். சமபடுத்தி வைத்த ப்ரட்டின் மேலே பரவலாக ஊற்றி வைகக்வும். அதற்கு மேல் மீதி எடுத்து வைத்த ப்ரட் கலவையை மேலே பரவலாக வைக்கவும். வைத்து 180 டிகிரி யில் 20 நிமிடம் பிரீ ஹீட் செய்து 20 நிமிடம் பேக் செய்யவும், பிறகு 10 நிமிடம் வைத்து எடுக்கவும். குனாபா ரெடி ஆனதும் சர்விங் ப்ளேட்டில் மாற்றி மேலே பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும். சுகர் சிரப் – அரை டம்ளர் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கவைத்து அதில் சாப்ரான்,லெமன் சாறு,ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா  வாட்டர் சிறிது சிறிது சேர்த்து வைக்கவும். குனாஃபா ரெடி ஆனதும், அதை சர்விங் பிலேட்டில்வைத்து ஒரு போர்க் வைத்து குத்தி விட்டு அதில் இந்த சுகர் சிரப் ஊற்றி சாப்பிடனும்

Mine coins – make money: http://bit.ly/money_crypto