முதுகைத் தான் துவட்ட வேண்டும்? ஏன் தெரியுமா?

211

குளித்த உடன் முதலில் முதுகைத் தான் துவட்ட வேண்டும்? ஏன் தெரியுமா?

நாம் குளித்து முடித்த உடன் முதலில் தலையை உதட்டுவதற்குப் பதிலாக முதுகைத் தான் துவட்ட வேண்டும் என்பதற்கு அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

உணவு, உடை, இருப்பிடம் என்பது மனிதனின் அத்தியாவசிய தேவை. நமது அன்றாட வாழ்க்கையில் குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்று ஒவ்வொன்றிற்கும் முறைகள் இருப்பதாக முன்னோர்கள் கூறி இருக்கின்றனர். தினமும் காலை, மாலை என்று இருவேளையிலும் குளிக்க வேண்டும். சுத்தம் சுகம் தரும் என்று பழமொழி கூட உண்டு. ஆனால், இதையும் தாண்டி ஆன்மீக காரணங்களும், அறிவியல் பூர்வமான உண்மை உள்ளது. சரி என்ன அது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

  1. குளிக்கும் போது எடுத்தவுடன் தலையில் தண்ணீர் ஊற்றக் கூடாது. முதலில் பாதத்திற்கு தண்ணீர் ஊற்றிய பிறகு தான் இறுதியாக தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால், உடலில் இருக்கும் வெப்பமானது கீழிலிருந்து மேல் நோக்கி தலைக்கு வந்து காது வழியாக வெளியேறும். ஆதலால், தான் தலைக்கு இறுதியாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
  2. இவ்வளவு ஏன், நமது முன்னோர்கள், ஆறு, ஏரிகளில் குளிக்கும் போது முதலில் காலுக்கு தண்ணீர் ஊற்றிய பிறகு, முதுகு அதன் இறகு இறுதியாக தலைக்கு வருவார்கள். அப்போது தமது உடலில் இருக்கும் வெப்பமானது வெகுவாக தணியும்.
  3. சரி, குளித்து முடித்தவுடன் முதலில் தலையை துவட்டலாமா? என்று கேட்டால் கூடாது. முதுகைத்தான் முதலில் துவட்ட வேண்டும். ஏனென்றால், குளிக்கும் போது நம் உடலில் யார் முதலில் அமர்வது என்று மகாலட்சுமிக்கும், அவரது அக்காவான மூதேவிக்கும் இடையில் கடும் போட்டி நடக்குமாம்.
  4. முதலில் அக்காதான் சென்று வர வேண்டும் என்பதற்கிணங்க, நாம் குளித்து முடித்த உடன் முதலில் தலையை துவட்டி விட்டால், அங்கு மூதேவி வந்து அமர்ந்து விடுவாள். இதன் விளைவாக, நமது அறிவு, புத்தி என்று எதுவும் வேலை செய்யாது. ஆகவே தான் முதுகைத் தான் முதலில் துவட்ட வேண்டும்.
  5. அப்படி செய்தால், முதுகில் மூதேவி அமர்வாள். அதன் பிறகு நமது முகத்தில் மகாலட்சுமி வந்து அமர்வாள். முதுகை துவட்டிய பிறகு முகத்தை, தலையை, கை, கால் என்று துவட்டும் போது முகத்தில் வந்து மகாலட்சுமி அமர்வாள். அப்படி முகத்தில் மகாலட்சுமி அமரும் போது முகம் தெளிவாகவும், பிரகாசமாகவும் இருக்கும். அதோடு சென்ற இடமெல்லாம் வரவேற்பு கிடைக்கும்.
  6. மாறாக முதுகிற்குப் பதிலாக முகத்தை துடைத்து விட்டால், மூதேவி வந்துவிடுவாள். அப்புறம் என்ன சொல்லவா வேணும்.
  7. பொதுவாக குழந்தைகளுக்கு ஜுரம், காய்ச்சல் அடிக்கிறதா என்று முதுகைத் தான் தொட்டு பார்ப்பார்கள். முதுகில் சூடு அதிகமாக இருக்கும் என்பதால், குளித்து முடித்தவுடன் முதுகை துவட்டி விட வேண்டும். நமது உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்க, முதலில் முதுகை துவட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.