குழந்தைகளுக்கு பிடித்தமான பன்னீர் புர்ஜி செய்யலாம் வாங்க!

77

குழந்தைகளுக்கு பிடித்தமான பன்னீர் புர்ஜி செய்யலாம் வாங்க!

*  பன்னீர் – 200 கிராம் (துருவியது)

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிதளவு

* உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, வேண்டுமானால் சிறிது மல்லித் தூளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் துருவிய பன்னீரை சேர்த்து சிறிது நீரைத் தெளித்து கிளறி, ஒரு நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

* பின் மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், அருமையான பன்னீர் புர்ஜி தயார்.