கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

100

கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

சமையலுக்கு பயன்படும் ஒரு வகை பருப்பு. இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக் கடலை மற்றொன்று கறுப்புக் கொண்டைக் கடலை. அளவில் சிறியதாக இருந்தாலும் அடிக்கடி சமையலில் குழம்பு வைக்க பயன்படுகிறது. இதுதவிர கோயில்களில் பிரசாதமாகவும் கொடுக்க பயன்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருட்களில் ஒன்று. வேகவைத்து சாப்பிடலாம். இல்லையென்றால் குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.

கொண்டைக்கடலையில் அதிகளவு புரதம், வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீஸ், மெக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கொண்டைக்கடலையிலுள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. இதிலுள்ள புரதங்கள் தசைகளை உருவாக்கவும், செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

மெக்சீனியம், கால்சியம், மாங்கனீசு ஆகியவை எலும்புகளை பலப்படுத்துகிரது. கொண்டைக்கடலையில் வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கல், அமிலத்தன்மை, அஜீரணம் ஆகிய பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.

தாமிரம் மற்றும் மாங்கனீசு சத்துக்கள் கொண்டைக்கடலையில் அதிகம் காணப்படுவதால் இது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இதனை உண்பதால், உடல் வெப்பநிலை சீராக இருக்கும். கொண்டைக்கடலை சாப்பிட இரத்த சோகை பிரச்சனை சரியாகும்.

பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகளவில் இருப்பதால் முடி உதிர்தல் பிரச்சனையை சரிசெய்கிறது.

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க கொண்டைக்கடலை உதவுகிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயம் குறைகிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது.

கொண்டைக்கடலையை உட்கொள்வது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பல நோய்களுடன், வானிலை மாற்றத்தால் வரும் பல உடல் பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.