கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்!

334

கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்!

ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் உண்டு. வெள்ளை கொய்யா மற்றும் சிவப்பு கொய்யா என்று கொய்யா பழத்தில் இரு வகைகள் உண்டு. ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கு ஏற்பவும், அதனுடைய குண நலன்கள் மாறுபடும்.

அந்த வகையில், கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம். கொய்யா பழத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. அதோடு, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதால், வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றை வலுவடைய செய்கிறது.

கொய்யாப்பழத்தை சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். ஏனென்றால், டைப் – 2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு கொய்யாப்பழம் மிகவும் உதவுகிறது.

கொய்யாப்பழத்திலுள்ள பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. மேலும், உடலிலுள்ல நஞ்சுகளை அகற்றவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும் கொய்யாப்பழம் உதவுகிறது.

கொய்யாப்பழத்தில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மருந்தாகவும் பயன்படுகிறது.

தினந்தோறும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

இரவு நேரங்களில் மட்டும் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இரவு நேரங்களில் கொய்யாப்பழம் சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் ஏற்பட வாய்ப்பு உண்டு.