கோடையில் தாகம் தணிக்கும் வெள்ளரி!

504

கோடையில் தாகம் தணிக்கும் வெள்ளரி!

வெள்ளரி என்பது ஒரு வகை கொடி. இதிலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் குழம்பாகவும், கூட்டாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடல் வெப்பத்தை தணிப்பதற்கு வெள்ளரி பிஞ்சு பயன்படுகிறது. ஏராளமான சத்துக்கள் வெள்ளரிக்காயில் நிறைந்துள்ளது. வெள்ளரிக்காயில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் தங்கும் தீய நச்சுக்களை சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால், சருமம் மெருகேறும்.

தினந்தோறும் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிப்பதற்கு வெள்ளரிக்காய் பயன்படுகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் உடலில் கலோரி அதிகரிக்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

உடல் எடை குறைக்கவும் வெள்ளரிக்காய் பயன்படுகிறது. அன்றாடம் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். கொழுப்பு செல்களை கரைக்கும். வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது.

வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் தினந்தோறும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வர வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும். ஈறுகளை பலப்படுத்தும். வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காயை 30 நிமிடங்கள் வரை வாயில் வைத்துக் கொள்ள வேண்டும். அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் போக்கும்.