கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

106

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

கோடை காலம் வந்துவிட்டால் உடலில் வெப்பம் அதிகமாகி கொப்புளங்கள், சரும பிரச்சனை, அம்மை நோய் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். உடலுக்கு போதுமான அளவு சத்துக்கள் இல்லாததால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கோடை காலம் வந்துவிட்டால் எந்தமாதிரியான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

கோடை காலத்தில் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் கண் எரிச்சல், கண் சூடு போன்ற எந்த பிரச்சனையும் வராது. அதோடு, உடலுக்கு நீர் தேவையான சத்துக்களை அளிக்கிறது. உடலில் கட்டி வராமலும் இது பாதுகாக்கிறது.

உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற சத்துக்கள் இளநீரில் இருப்பதால் வெயில் காலத்தில் குடிப்பது நல்லது.

ஸ்ட்ராபெரியில் அதிகளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ப்ளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி என பல விதமான பெயர்களில் ஸ்ட்ராபெரி பழம் அழைக்கப்படுகிறது. தினந்தோறும் ஒரு பழம் வீதம் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை அளிக்கும். கெட்ட இரத்தத்தை வெளியேற்றி நல்ல இர்த்தத்தை ஊற வைக்கும். நல்ல இரத்தம் உடலில் இருக்கும் பொழுது வெயில் காலத்தில் வெளியில் செல்லும் போது உடல் வெப்பத்தை தாங்கும்.

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வர கோடைகாலத்தில் தொண்டையில் வறட்சி வராமல் தடுக்கிறது. உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை தருகிறது. தினந்தோறும் வெந்தயத் தண்ணீர் குடித்து வர சிறுநீர் கோளாறு நீங்கும். நீர்கடுப்பு பிரச்சனையும் சரியாகும்.

சிட்ரஸ் பழத்தின் அதிகளவில் வைட்டமின் சி சத்துகள் நிறைந்து இருக்கும். கோடை காலத்தில் அதிகளவில் நீர் சத்து தான் தேவைப்படும். நீர் சத்து அதிகளவில் சிட்ரஸ் பழத்தில் நிறைந்துள்ளது. ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை, கிவி, கொய்யா ஆகிய பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கோடை காலத்தில் இது போன்ற பழங்களில் தினந்தோறும் ஜூஸ் குடித்து வர உடலுக்கு தேவையான சக்தியும், நோய் எதிர்ப்பு ஆற்றலும் கிடைக்கும்.