சத்துக்கள் நிறைந்த கீரையை வைத்து போண்டா செய்வது எப்படி?

183

சத்துக்கள் நிறைந்த கீரையை வைத்து போண்டா செய்வது எப்படி?

கீரைகளில் அதிகப்படியான இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினந்தோறும் உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். சரி, சத்துக்கள் நிறைந்துள்ள கீரையை வைத்து போண்டா செய்வது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்….வாங்க…

தேவையான பொருட்கள்:

  1. கீரை – ஒரு கை அளவு
  2. (முருங்கை, சிறுகீரை, அரைக்கீரை)
  3. கடலை மாவு – 200 கி
  4. அரிசி மாவு – 1 தேக்கரண்டி
  5. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் – 1/2 சின்ன கரண்டி
  7. ஆப்ப சோடா – 1 சின்ன கரண்டி
  8. உப்பு – தேவையான அளவு
  9. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கீரையை நன்றாக கழுவி பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆப்ப சோடா அனைத்தையும் கலந்து தண்ணீர் சேர்த்து போண்டா போடும் பதத்திற்கு பிசைந்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இறுதியாக தேவையான கீரை போண்டா தயார்.