சத்து மாவு

237

சத்து மாவு அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம் (வயது: 6 மாதத்தில் இருந்து). இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். இது உடலுக்குத் தெம்பூட்டுவதோடு, மேலும் பல நன்மைகள் அடங்கி உள்ளது. இதை காற்றுபுகாத பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம்.

ஸ்கூல், ஸ்போர்ட்ஸ், டியூஷன் என ஓடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு எல்லா சத்துகளையும் கொடுக்கக் கூடிய ஒரே பொருள் ஹெல்த் மிக்ஸ்தான். கோதுமை, சோளம், கம்பு, வேர்க்கடலை, பருப்பு வகைகள் எல்லாம் தேவையான அளவில் இருப்பதால் பிள்ளைகள் ஹெல்த்தியாக இருப்பார்கள்.

கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி, கஞ்சி போல காலையில் கொடுக்கலாம். வெல்லம் கலந்து உருட்டி, லட்டு போல மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம். இதில் எல்லா வகையான சத்துகளும் கிடைப்பதால் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு சரியான தேர்வு. இத்துடன் முந்திரி, வேர்க்கடலையும் சேர்த்துக் கொண்டால் கொழுப்புச்சத்தும் கிடைக்கும். நல்ல தரமான மிக்ஸை வீட்டில் நாமேகூட செய்து கொள்ளலாம்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்:

பாதாம் – 10 கிராம்
முந்திரி – 10 கிராம்
ஏலம் – 5 கிராம்
சோயா பீன்ஸ் – 25 கிராம்
கோதுமை – 50 கிராம்
பாசி பயிறு – 50 கிராம்
பொரிகடலை – 50 கிராம்
வேர்கடலை – 50 கிராம்
கேழ்விரகு – 250 கிராம்
கம்பு – 250 கிராம்
சோளம் – 200 கிராம்
வெள்ளை சோளம் – 150 கிராம்
பார்லி – 50 கிராம்
ஜவ்வரிசி – 50 கிராம்
புட்டு அரிசி – 100 கிராம்
தினை – 100 கிராம்
உளுந்து – 50 கிராம்
கானம் – 50 கிராம்

இதில் பாதாம், முந்திரி, ஏலம், பொரிகடலை மற்றும் வேர்கடலை இவைகளை தவிர்த்து மற்றவைகளை தனிதனியாக வறுத்து ஆற வைத்து மாவு மில்லில் கொடுத்து திரித்து வைத்துக் கொள்ளவும்

கஞ்சி செய்முறை:

சத்துமாவு – 3 டீஸ்பூன்
பால் – 1 கப்
சர்க்கரை / கருப்பட்டி / பனைவெல்லம் – தேவையான அளவு (சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சர்க்கரை உபயோகிப்பது மிகவும் நல்லது).
நெய் – 1 டீஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சத்துமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும். இந்த கலவையை அடுப்பில் குறைந்த தணலில் வைத்து கட்டியாகாதவாறு கைவிடாமல் நன்கு கலக்கி கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் பொங்கி வரும் சமயம் இறக்கி நெய் சேர்க்கவும். உங்களுக்கான சுவையான + ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி தயார்.

.