சர்க்கரை நோயாளிகள் சக்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா?

254

சர்க்கரை நோயாளிகள் சக்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா?

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் சர்க்கரை (சக்கரை) வள்ளி கிழக்கு என்றால் என்ன என்பதே தெரிந்திருக்காது. இப்படிப்பட நிலைக்கு காலம் வந்துவிட்ட து. நமது முன்னோர்கள் எப்போது இயற்கை உணவுகளை உட்கொண்டு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், நாம் அதற்கெல்லாம் மாறாக எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தான் விரும்பு உட்கொண்டு வருகிறோம். ஆனால், அதனால், ஏற்படும் பின்விளைவுகள் பற்றி யாரும் தெரிந்து கொள்வதுமில்லை. அதைப் பற்றி கவலைப்படுவதுமில்லை.

இப்படிப்பட்ட நிலையில், பெரியவர்கள் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகை தான் இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு. ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும்.

உண்மையில், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடலாம். ஏனென்றால், இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கிளைசெமிக் இண்டெக்ஸ் என்ற வேதிப்பொருள் குறைவாக இருக்கிறது. ஆகையால், இதனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடலாம். அதோடு, அவர்களது உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளும் கிடைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவும் செய்கிறது. ஆதலால், இதனை சர்க்கரைவள்ளிக் கிழங்கு என்று சொல்வதற்குப் பதிலாக சர்க்கரை கொல்லிக் கிழங்கு என்று தாராளமாக சொல்லலாம்.