சாப்பாடு அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வருமா?

331

சாப்பாடு அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வருமா?

எவ்வளவுக்கு எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ அந்தளவிற்கு நமக்கு எந்த நோயும் வராது. ஆனால், இன்றைய நாகரீக வாழ்க்கையில் ஆரோக்கியமான உணவுகளுக்குப் பதிலாக எளிதில் செரிமானமாகாத உணவுகளையும், ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் ஆகிய உணவுகளை அதிகளவிலும் சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளோம்.

எந்த உணவாக இருந்தாலும் அளவோடு எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் வராது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் தினந்தோறும் சாப்பாடு சாப்பிட்டால் கூட சர்க்கரை நோய் உள்ளிட்ட எந்த நோயும் வருவதில்லை. அவர் எப்படி சாப்பிடுறார் என்பதைப் பொறுத்துதான் வருகிறது.

பழங்காலத்தில் நமது முன்னோர்கள் சாத த்தை வடித்து சாப்பிட்டு வந்ததோடு, அதில் செய்யப்படும் கஞ்சியையும் குடித்து வந்தனர். ஆனால், இப்போதெல்லாம் குக்கரில் செய்யப்படும் ஸ்டார்ச் சாதத்துடன் தங்கிவிடுகிறது. இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு குளுக்கோஸை அதிகமாக்கிவிடுகிறது.

சாப்பிடும் சாப்பாடு மிஞ்சிய நிலையில் அதில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் பழைய சாதம் சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதோடு வயிற்றுக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகிய பாதிப்புகளும் ஏற்படாது.

தினந்தோறும் சாப்பாடு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. ஆனால், எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். குக்கரில் வேக வைத்த உணவுகளை தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

எப்போதெல்ல்லாம் சாப்பாடு வடிக்கிறோமோ அப்போதெல்லாம் சூடாக இருக்கும் கஞ்சியில் சிறிதளவு உப்பு போட்டு அதனை குடித்து வந்தால் உடலுக்கு தெம்பு அளிப்பதோடு, கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும். இதுவே கஞ்சியை ஆற வைத்து பருகினால் வாயு தொந்தரவு ஏற்படும்.

உலையில் கொதித்துக் கொண்டிருக்கும் போது அதிலுள்ள கஞ்சியை எடுத்து குடித்தால் நீர்க்கடுப்பு பிரச்சனை சரியாகும். எப்போதும் சாப்பிடும் போது சாதத்தை மிதமான சூட்டில் தான் சாப்பிட வேண்டும். இதுவே ஆற வைத்து சாப்பிட்டால் வாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். கஞ்சி, கம்மங் கூழ், கேழ்வரகு கூழ், பழைய சோறு என்று நமது முன்னோர்கள் சாப்பிட்டு வந்ததால் தான் நீண்டகாலம் அவர்களால் உயிர் வாழ முடிந்தது.

சாதம் வெதுவெதுப்பாக இருக்கும் போது அதனுடன் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர் தாகம் நீங்கும், பித்தமும் சரியாகும்.

இதுவே பச்சரிசி சோற்றில் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம் நீங்கும். மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்குவதோடு வாதம், பித்தத்தை தணிக்கிறது.

சம்பா சோறு வயிற்றுப் பொருமலுக்கு மிகவும் நல்லது. வாழை இலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை அளிக்கிறது. காலையில் எப்பொழுதும் சாப்பிடுவதற்கு முன்னதாக தோல் நீக்கிய இஞ்சி ஒரு துண்டு சாப்பிட்டால் தொப்பை பிரச்சனை சரியாகும்.

எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பிடுகிறோமோ அந்தளவிற்கு உடல் உழைப்பும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை வியாதி உள்ளிட்ட எந்த நோயும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.