சாப்பாடு மூலமாகவே உடல் எடை குறைய எளிய முறை!

748

சாப்பாடு மூலமாகவே உடல் எடை குறைய எளிய முறை!

அளவுக்கு அதிகமான உடல் எடையால் பாதிக்கப்பட்டோர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதிகமான உடல் எடையை குறைக்க பலரும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். பலர் ஜிம்மிலும், உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், உண்மையில் நாம் சாப்பாட்டு மூலமாகவே உடல் எடையைக் குறைக்கலாம். அது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

  1. வாரத்திற்கு 3 நாட்கள் ஓட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. முட்டையை நன்கு வேக வைத்து மிளகு மற்றும் உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
  3. மீனை எண்ணெயில் பொரித்து எடுக்காமல், தோசைக் கல்லில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
  4. பன்னீர் கொண்டு வறுவல், பொரியல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.
  5. பிற்பகல் நேரங்களில் தயில் ஒரு கப் எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலமாக அளவுக்கு அதிகமாக சாப்பாடு எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.
  6. மேலும், பிற்பகல் நேரங்களில் சாப்பிட்டு முடித்த பின்னர் சீரகம் அல்லது சோம்பு ஆகியவற்றை நீரில் ஊறவைத்து குடிக்கலாம். அப்படியில்லை என்றால் சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து பருகலாம்.
  7. முந்திரி மற்றும் பாதாம் பருப்பை எண்ணெயில் பொரிக்காமல் சாப்பிடலாம். மேலும், சிக்கன் சூப் அல்லது காய்கறி சூப் செய்து ஒரு நேர உணவாக அதனை எடுத்துக் கொள்ளலாம்.