சிறுகீரை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

122

சிறுகீரை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். அதிக ஆரோக்கியத்தையும், போதுமான சத்துக்களையும் கொடுப்பதில் அரைக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி கீரை, புளிச்சக்கீரை, முடக்கத்தான் கீரை, சிறுகீரை, வெந்தயக் கீரை, தண்டுக்கீரை, பண்ணைக்கீரை, பருப்புக்கீரை, பொன்னாங்கன்னி கீரை, முருங்கைக்கீரை என்று கீரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுகீரையும் ஒன்று. இந்த சிறுகீரை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

சிறுகீரை அல்லது குப்பைக்கீரை ஒரு மருத்துவ மூலிகை. பருப்பு கூட்டு, பொரியல், புலவு என்று பல வகைகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது. உடல் வலிமை அதிகரிக்கவும், மூலநோய், காசநோய், மாலைக்கண், வெள்ளெழுத்து ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்தவும் சிறுகீரையானது பயன்படுகிறது. சிறுகீரையில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் ஆகிய தாதுக்கள் நிறைந்துள்ளன.

நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இது குடல் சுத்திகரிப்பானாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யவும், மலச்சிக்கல் பிரச்சனை தீரவும் சிறுகீரை பயன்படுகிறது.

தவறான உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு சிறுகீரை சிறந்த மருத்துவ காரணியாக பயன்படுகிறது. சிறுகீரை ஆண்களின் உடலில் உயிரணுக்கள் பெருக்கும் திறன் கொண்டுள்ளது. இதனை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை பிரச்சனையை சரிசெய்கிறது.

வயது கூட கூட உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது குறையத் தொடங்கும். சிறுகீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது மேம்படும். வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்ட விடாமல் பாதுகாக்கிறது.

உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதனை குணப்படுத்த சிறுகீரையானது பயன்படுகிறது. காயங்களினால் ஏற்படும் கிருமி தொற்றை தடுப்பதுடன் காயங்களை சீக்கிரம் குணப்படுத்தவும் சிறுகீரையானது பயன்படுகிறது.

கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. ஏனென்றால், இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகீரையில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுப்படுதோடு, விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

சிறுகீரையில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.