சீரகத்தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

168

சீரகத்தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

தினமும் தூங்கி எழுந்ததும் காபி அல்லது டீ குடித்தால் அடுத்த வேலை செய்ய முடியும் என்று இருப்பவர்கள் எத்தனையோ பேர். அதில், சிலர் காலையில் செய்தித்தாள் வாசித்தால் தான் அவர்களுக்கு அன்றைய நாள் நகரும். சரி, காலையில் காஃபியோ அல்லது டீயோ குடித்தால் உடலுக்கு நல்லதா? என்று கேட்டால் இல்லைஎன்று கூட சொல்லலாம்.

ஏனென்றால், தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் வாந்தி, மயக்கம், தலை சுற்றல் போன்றவை உருவாவதற்கு முதன்மை காரணமாக விளங்குவதே டீ, காஃபி குடிப்பதால் தான் என்று கூறப்படுகிறது. சரி, இதற்கு பதிலாக என்ன செய்யலாம் என்று கேட்குறீங்களா?

இதையும் படிங்க: வெந்தயத்தண்ணீர் குடிப்பதன் பயன்கள்!

உடலுக்கு நல்லதாகவும் இருக்க வேண்டும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், தினமும் காலை எழுந்தவும் இதனை குடித்து வந்தால் போதுமானது. அப்படி எதை சொல்றீங்க என்ரு கேக்குறீங்களா? புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை. மிகவும் எளிமையான ஒன்று தான். அதுதான் சீரகத்தண்ணீர். இதற்கு முன்னதாக எலுமிச்சை சாறு மற்றும் வெந்தயத்தண்ணீர் குடிப்பதன் பயன்கள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் சீரகத்தண்ணீர் குடிப்பதன் பயன்கள் பற்றி காண்போம்.

மேலும் படிக்க: டீ, காஃபி கட்: எலுமிச்சை சாறு குடிப்பதன் பயன்கள்!

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அல்லது உங்களுக்கு தேவையான அளவு சீரகத்தை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை குடித்தால் உடல் உபாதைகள் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும். செரிமான பிரச்சனைகள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதையும் வாசிங்க: தாய்ப்பாலுக்கு கூழ் அவசியம்!

இரத்த சோகை நோயும் குணமாகும். இவ்வளவு ஏன் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும். முடி கொட்டும் பிரச்சனை முடிவுக்கு வரும். தினந்தோறும் அல்லது வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இப்படி சீரகத்தண்ணீர் குடித்து வந்தால் எந்த பிரச்சனையும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.