சுரைக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

438

சுரைக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

உணவாக பயன்படும் வெப்ப மண்டல தாவரம் தான் சுரைக்காய். ஆரம்பத்தில் இது உணவுக்காக பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாக பயன்பட்டன. அதிக சத்து நிறைந்த காய்களில் சுரைக்காயும் ஒன்று. கொழுப்பைக் குறைப்பதிலும், சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் அது மட்டுமே.

உடல் எடையை குறைப்பதில் சுரைக்காய் முக்கிய பங்காற்றுகிறது. சுரைக்காயில் வைட்டமின் சி, சோடியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை குறைக்கலாம். சுரைக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

இது உங்களது எலும்புகளை பாதுகாக்க உதவுகிறது. மாரடைப்பு அபாயத்தையும் சுரைக்காய் குறைக்கிறது. சுரைக்காய் சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு அளவு சீராகும். ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

நரை முடி பிரச்சனையையும் சுரைக்காய் சரி செய்கிறது. கூந்தல் வலுப்பெற தினந்தோறும் ஒரு டம்பளர் சுரைக்காய் சாறு குடித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். நரை முடி பிரச்சனையையும் நீக்குகிறது.

மன அழுத்தம் காரணமாக ஏற்படும் நோய்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சுரைக்காய் சாப்பிட்டு வர மன அழுத்தம் குறையும். சுரைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. சரக்கரை மற்றும் குளுக்கோஸின் அளவு குறைவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.