சுவையான கோதுமை ரவா தோசை செய்வது எப்படி?

81

சுவையான கோதுமை ரவா தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. கோதுமை மாவு – 3/4 கப்
  2. அரிசி மாவு – ¼ கப்
  3. ரவை – ½ கப்
  4. புளித்த மோர் – 1 கரண்டி
  5. சீரகம் – 1 டீஸ்பூன்
  6. வெங்காயம் – 1
  7. பச்சை மிளகாய் –  1
  8. இஞ்சி – சிறு துண்டு
  9. கொத்தமல்லி – சிறிதளவு
  10. கறிவேப்பிலை – சிறிதளவு
  11. எண்ணெய்  – தேவையான அளவு
  12. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணிர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லைப் போட்டு சூடானதும், சிறிது எண்ணெயைத் தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துத் பரிமாறவும்.