சுவையான பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?

241

சுவையான பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. கீரை – 200 கிராம் (2 கெட்டுகள்)
  2. தண்ணீர் – 1 கப்
  3. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  4. வெங்காயம் – 1 கப் (நறுக்கியது)
  5. தக்காளி – 1 கப் (சதுர வடிவில் நறுக்கியது)
  6. பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
  7. முழு முந்திரி பருப்பு – 4
  8. உப்பு – 1 டீஸ்பூன்
  9. சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  10. ப்ரஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்,
  11. அலங்கரிக்க – பன்னீர் துண்டுகள் – 1 கப்

செய்முறை:

ஓரு வடிகட்டும் பாத்திரத்தில் கீரையை எடுத்து 2 அல்லது 3 முறை அலசி தண்ணீரை வடிகட்டி கொள்ள வேண்டும். அதை இப்பொழுது ஒரு ப்ரஷ்ஷர் குக்கரில் சேர்க்க வேண்டும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரை அலசி எடுத்து வைத்த கீரையை வேக வைக்க வேண்டும். அதே சமயத்தில் அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளி பழத்தை சேர்க்க வேண்டும். நன்றாக கிளற வேண்டும். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். இதையடுத்து, முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ஒருபக்கம் குக்கரின் மூடியை திறந்து வேக வைத்த கீரையை ஒரு 10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி சார்பில் போட வேண்டும்.

வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி சாரில் போட்டு நன்றாக வழுவழுப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். இப்பொழுது அரைத்த கலவையை அதில் கொட்டி நன்றாக வதக்க வேண்டும்

இப்பொழுது 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலக்க வேண்டும்.

இப்பொழுது மூடியை மூடி ஒரு நிமிடங்கள் சமைக்க வேண்டும். அதை வேக விட வேண்டும். இப்பொழுது வேக வைத்த கீரையை மிக்ஸி சாரில் சேர்க்க வேண்டும். நன்றாக வழுவழுப்பாக மிதமான பதத்தில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்த கீரையை கடாயில் உள்ள மசாலா கலவையுடன் சேர்த்து மறுபடியும் மூடியை மூடி ஒரு நிமிடம் வரை சமைக்க வேண்டும்.

பிறகு மூடியை திறந்து நறுக்கி வைத்த பன்னீரை கறியில் சேர்க்க வேண்டும். பிறகு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஃபரஷ் க்ரீம் கொண்டு அலங்காரம் செய்ய, பாலக் பன்னீர் ரெசிபி ரெடி.