சுவையான முளைவிட்ட கொள்ளு வடை செய்வது எப்படி?

127

சுவையான முளைவிட்ட கொள்ளு வடை செய்வது எப்படி?

  1. முளை விட்ட கொள்ளு – 200 கிராம்
  2. கருப்பு உளுந்து – 50 கிராம்
  3. பச்சரிசி – ஒரு டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  5. பச்சை மிளகாய் – 4
  6. நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப்
  7. இஞ்சி – ஒரு துண்டு
  8. சோம்பு – சிறிதளவு
  9. எண்ணெய் – தேவையான அளவு
  10. உப்பு  – தேவையான அளவு

செய்முறை:

கருப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கருப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கடாயை எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும். சூப்பரான முளை விட்ட கொள்ளு வடை தயார்.