சூடுபடுத்தி சாப்பிட்டால் விஷமாக மாறும் உணவுகள்!

264

சூடுபடுத்தி சாப்பிட்டால் விஷமாக மாறும் உணவுகள்!

நவீனமயமான நாகரீக வாழ்க்கையில் மின்னணு சாதனங்களுக்கு நாம் அடிமையாகி வருகிறோம். குளிர்சாதன பெட்டி, நுண்ணலை அடுப்பு போன்ற மின்னணு சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. தேவைப்படும் போது சமையல் செய்து சாப்பிட்ட காலம் போய் தேவைக்கு அதிகமாக சமையல் செய்து அதனை கெட்டுப் போகாமல் இருக்க குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும் போது எடுத்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு வந்து விட்டது. பழங்காலத்தில் மண்பானைகளில் சமையல் செய்து சாப்பிட்டு வந்ததால், நமது முன்னோர்கள் நீண்ட காலமாக நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தனர்.

ஆனால், நாம், நாகரீக வாழ்க்கை என்ற பெயரில் சமையல் செய்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கத்திற்கு மாறி வருகிறோம். ஆனால், அது நமது உடலுக்கு கேடு என்பதை யாரும் அறிந்து கொள்வதில்லை. அண்மையில், நாட்டையே உலுக்கிய கொரோனாவுக்கு, தினந்தோறும் முட்டை, பயறு வகைகளை எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் பலரும் அறிவுறுத்தி வந்தனர்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

கீரை:

பொதுவாக எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்று கீரை வகைகள் தான். அதுவும், இந்த கீரை வகைகள் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கீரையில் இரும்புச்சத்து அதிகளவில் இருக்கிறது. மேலும், நைட்ரேட்டும் அதிகமாக இருக்கிறது. ஆனால், சூடுபடுத்தும் போது நைட்ரேட்ஸ் ஆனது, நைட்ரைட்டாக மாறி புற்றுநோய் உண்டாக்கும் அளவிற்கு விஷமாக மாறுகிறது.

முட்டை:

புரோட்டீன் சத்து அதிகளவில் உள்ள உணவு எது என்றால் அது முட்டை தான். பொதுவாக முட்டையை வேக வைத்தோ அல்லது பொடிமாஸ் அல்லது ஆம்லேட் அல்லது மசாலா போட்டு வறுத்தோ சாப்பிடுவது வழக்கம். அப்படி வேக வைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது அது விஷமாக மாறும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் வரும்.

சாதம்:

பொதுவாக அனைவருமே அன்றாடம் எடுத்துக் கொள்ளும் ஒரு உணவு என்றால் அது சாப்பாடு தான். காலை மற்றும் இரவைத் தவிர மதியம் என்ற ஒரு வேலை மட்டுமே சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். அப்படியிருக்கும் போது அளவுக்கு அதிகமாக சாதம் வடித்து, அது மிஞ்சி விட்டதே என்று எண்ணி, மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டு வருகின்றனர். சாதத்தை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் நச்சுத்தன்மை அதிகரித்து புட் பாய்ஸன் (Food Poisoning) ஆக மாறி விடும்.

காளான்:

காளானை சமையல் செய்து உடனே சாப்பிட்டு விட வேண்டும். அதனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது அதிலுள்ள புரோட்டீன், விஷமாக மாறி செரிமானக் கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கை உண்டாக்கும்.

சமையல் எண்ணெய்:

பெரும்பாலும் கடைகளில் சிக்கனை பொரிப்பதற்கு திரும்ப திரும்ப ஒரே எண்ணெய்யைத் தான் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு டீ கடைகளிலும் இதே நிலை தான். எந்த மாதிரியான சமையல் எண்ணெய்யாக இருந்தாலும், அதனை திரும்ப திரும்ப சூடுபடுத்தி பயன்படுத்தும் போது இதய நோய், புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

சிக்கன்:

சிக்கனில் உள்ள புரோதச்சத்து அதனை சூடுபடுத்தும் போது மீண்டும் மீண்டும் அதிகரிக்கும். இதன் விளைவாக புட் பாய்சன் ஏற்படும் நிலை வரும். ஆகவே, சிக்கனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு:

நாம் சமையல் செய்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் உருளைக்கிழங்கிலேயே தங்கிவிட வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்கும் போது அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது நச்சுத்தன்மை அதிகரித்து, வாந்தி, மயக்கம் உள்பட உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே அளவுக்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சு என்பதையறிந்து, உணவே மருந்து என்று தெரிந்து கொண்டு அளவோடு சாப்பிட்டு வலமோடு வாழ ஒவ்வொருவரும் பழகிக் கொள்ள வேண்டும்.