செம்பருத்திப்பூ பொடி சாப்பிட்டால் என்ன பலன்?

554

செம்பருத்திப்பூ பொடி சாப்பிட்டால் என்ன பலன்?

நம் நாட்டில் எத்தனையோ மூலிகை தாவரங்கள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் நாம் பெரிதாக பயன்படுத்திக் கொள்வதில்லை. நமது முன்னோர்கள் அதனை நன்றாகவே பயன்படுத்தி நீண்ட நாட்கள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் எளிதில் ஜீரணமாகாத உணவுகளைத்தான் நாம் அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம். சிக்கன் ப்ரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ், கிரில் சிக்கன், நூடுல்ஸ், புரோட்டா ஆகியவற்றை நாம் விரும்பி சாப்பிடுவதோடு, நமது குழந்தைகளுக்கும் அதைத்தான் கொடுக்கிறோம். இதன் மூலமாக உடல் நல பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சரி, இதெல்லாம் இருக்கட்டும், மூலிகைகள் குறித்தும், அதற்கான பலன்கள் குறித்தும் இந்தப் பதிவில் நாம் காண்போம்…

முந்தைய பதிவின் தொடர்ச்சி தான் இது…..பகுதி – 2….

திப்பிலி பொடி: உடல் வலி, சளி, இருமலுக்கு சிறந்த மருந்து.

நாயுருவி பொடி: உள், வெளி, மூலத்திற்கும் சிறந்த மருந்தாக நாயுருவி பயன்படுகிறது.

வேப்பிலை பொடி: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு வேப்பிலை பொடி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

நிலவாகை பொடி: மலமிளக்கி மற்றும் குடல் புண் ஆகியவற்றிற்கு நிலவாகை பொடியானது சிறந்த மருந்து.

கறிவேப்பிலை பொடி: முடி கருமையாகவும், கண் பார்வைக்கும் சிறந்த மருந்து. மேலும், இரும்புச் சத்து அதிகரிக்கவும், இரத்தம் சுத்தம் செய்யப்படுவதிலும் கறிவேப்பிலை பயன்படுகிறது.

அதிமதுரம் பொடி: தொண்டை கமறுவதற்கும், வரட்டு இருமல் சரியாவதற்கும் குரல் இனியாவதற்கும் இந்த அதிமதுரம் பொடி பயன்படுத்தப்படுகிறது.

செம்பருத்திப் பூ பொடி: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்த மருந்தாக செம்பருத்தி பூ பயன்படுத்தப்படுகிறது.

மருதாணி பொடி: பித்தம் சரியாகும், கபம் குணமாகும்.

கரிசலாங்கண்ணி பொடி: காமாலை, முடி வளர்ச்சிக்கும், ஈரல் நோய் குணமாவதற்கும் கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கீழாநெல்லி பொடி: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்த மருந்து.

முடக்கத்தான் பொடி: கை, கால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, வாதத்திற்கும் சிறந்த மருந்தாக முடக்கத்தான் பொடி பயன்படுகிறது.

குப்பைமேனி பொடி: சொறி சிரங்கு தோல் நோய்க்கு சிறந்த மருந்து குப்பைமேனி பொடி.

முருங்கை விதை பொடி: ஆண்மை சக்தி அதிகரிக்கப்பதில் முருங்கை விதை முக்கிய பங்கு வகிக்கிறது.

பொன்னாங்கண்ணி பொடி: உடல் சூடு தணியவும், கண் நோய்க்கும் சிறந்த மருந்தாக பொன்னாங்கண்ணி பயன்படுகிறது.

லவங்கப்பட்டை பொடி: கொழுப்புச்சத்தை குறைக்கவும், மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகவும் லவங்கப்பட்டை பொடி பயன்படுகிறது.

வசம்பு பொடி: வாந்தி, குமட்டல் நீங்கவும், பால் வாடை நீங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சோற்றுக் கற்றாழை பொடி: உடலுக்கு குளிர்ச்சிதருவதில் சோற்றுக் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. முகப் பொலிவிற்கும் பயன்படுகிறது.

பதிவு 3…..தொடரும்…..