செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்!

163

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்!

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் இலக்கியம், வாழ்வியல் மட்டுமின்றி அறியவிலிலும் சிறந்து விளங்கியுள்ளனர். உணவு பழக்க வழக்கம், ஆரோக்கியமான வாழ்வு ஆகியவற்றால் நீண்ட நாள் வாழ்ந்துள்ளனர். எப்படி சமைக்க வேண்டும், எதில் சமைக்க வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதிலிருந்து எப்படி வாழ வேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருந்தனர்.

இவ்வளவு ஏன், எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் கூட அவர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. வெளியிலிருந்து வீட்டிற்கு வந்த உடனும் தண்ணீர் குடிக்க கூடாது. இப்படியெல்லாம் சொல்லலாம். நாம், குடிப்பதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் 100 சதவிகிதம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

குறிப்பாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை கொண்ட தாக கூறப்படுகிறது. அன்றைய காலகட்ட த்தில் மண் பாண்டங்களில் சமையல் செய்து, மண் பாண்டங்களில் தண்ணீர் குடித்து செம்பு பாத்திரங்களை அதிகளவில் பயன்படுத்தி நோய் நொடியின்றி ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்துள்ளனர்.

இன்று நல்லது கெட்டது சொல்லித் தருவதற்கு நமக்கு தாத்தா பாட்டி இல்லை. அப்பா அம்மா இல்லை. இருந்தாலும் அவர்கள் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள். சரி, முன்னோர்கள் பயன்படுத்தி செம்பு பாத்திரங்களினால் (காப்பர்) கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்…

1. மூட்டு வலி:

வயதானவர்களுக்கு அடிக்கடி வரக் கூடிய ஒன்று தான் இந்த மூட்டு வலி. செம்பு பாத்திரங்களில் (காப்பர்) தண்ணீர் குடித்து வந்தால், மூட்டு வலியை குறைக்கலாம்.

2. செரிமானக் கோளாறு:

செரிமானக் கோளாறு பிரச்சனைக்கு செம்பு பாத்திரங்களில் (செப்புப் பாத்திரங்கள்) தண்ணீர் குடிப்பது சிறந்த மருந்தாகும்.

3. முதிர்ச்சி:

காப்பர் என்று சொல்லக்கூடிய செப்பில் இருக்கக்கூடிய ஆன்டி – ஆக்ஸிடன்ட்ஸ் உங்களது சருமத்தை பாதுகாத்து, சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது. நீங்கள் இன்று போல் என்றும் இளமையாக இருக்க செப்பு பாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

4. பாக்டீரியாக்களைக் கொல்லும்:

செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்தி தண்ணீர் அருந்துவதால், நீரில் உள்ள கிருமிகள் கொல்லப்படுகின்றன. முற்றிலும் வயிற்றுப் போக்கு, வயிறு பிரச்சனைகளுக்கு செப்பு பாத்திரங்கள் உதவுகின்றன.

5. புற்றுநோய்:

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, புற்றுநோயை உண்டாக்கும் நோய் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தடுக்க இந்த செப்பு பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது.

6. காயங்கள் குணமாக:

புதிய செல்கள் வளரவும், ஆரோக்கியமாக இருப்பதற்கு செப்புப் பாத்திரங்கள் உதவுகிறது. இதனால், காயங்கள் ஏற்பட்டாலும் அதனை விரைவில் குணமடையச் செய்யும் தன்மை இந்த செப்புப் பாத்திரங்களுக்கு இருக்கிறது.

7. மூளை பாதுகாப்பு:

மையிலின் உறையை பாதுகாக்க செப்புப் பாத்திரங்கள் உதவுகிறது. மூளையில் நியூரான்களுக்கு மத்தியிலிருக்கும் இடைவெளியை இந்த மையிலின் உறையானது மூடி பாதுகாக்கிறது. ஆதலால், உங்களால் எவ்வளவு முடிந்தாலும் செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடியுங்கள்.

8. இரத்த சோகை:

உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதற்கு இந்த செப்பு பாத்திரங்கள் பயன்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடித்து வந்தாலே இரத்த சோகை நோய் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

9. கர்ப்பிணி பெண்கள் (பிரசவக் காலங்கள்):

கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவக் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அப்படிப்பட்ட காலங்களில் செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதோடு, பிரசவ காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களும் தடுக்கப்படும்.