சைவம், அசைவம் என்ன வேறுபாடு?
பொதுவாக் நாம் அனைவருமே அசைவம் என்றால் மாமிசம் என்பதையும், சைவம் என்றால் மாமிசம் அல்லாத உணவு வகைகளை தான் சொல்கிறோம். ஆனால், உண்மையில் தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகளை தான் சைவம் என்கிறோம். அதற்கு யானை, ஆடு, மாடு, குரங்கு ஆகியவற்றை உதாரணமாக கூறலாம். தண்ணீரை நக்கி நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். அதற்கு சிங்கம், நாய், புலி, பூனை ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.
இயற்கையாகவே தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை. ஆனால், தண்ணீரை நக்கி நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும். செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.
மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்?
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தண்ணீரை உறிந்து உறிந்து தான் அருந்தி வருகிறோம். அப்படியிருக்கும் போது நாம் சைவ வகையை சேர்ந்தவர்கள் தான். நாம் கீரையும். பச்சை காய்கறிகளையும் மட்டுமே சாப்பிட்டு 100 ஆண்டுகள் கூட வாழ முடியும். ஆனால், புலியோ, சிங்கமோ, கரடியோ, பூனையோ, நாயோ அப்படியில்லை.
என்னதான் வேட்டையாடி உணவு உண்டு வந்த நிலையை கடந்து வந்து பயிர் செய்து உயிர் வாழ முடியும் என்ற பரிமாண வளர்ச்சியை அடைந்தாலும் நாக்கு ருசி இன்னும் மாறவும் இல்லை. மறையவும் இல்லை.
மாமிசம் மனித உணவா?
இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு:
சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன. ஆனால் அசைவ இனங்களுக்கு எப்போதும் கூர்மையான பல் அமைப்பு இருக்கும்.
கால் விரல்கள்:
சைவ ஜீவராசிகளுக்கு மனிதர்களைப் போன்று சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும். ஆனால், அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.
வாழும் முறை:
சைவ ஜீவராசிகள் கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான். இதற்கு நேர்மாறாக அசை ஜீவராசிகள் தனது இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.
குணம்:
சைவ ஜீவராசிகள் எப்பொழுதும் சாந்தமாகவும் அமைதியாகவும் இருக்கும். ஆனால், அசைவ ஜீவராசிகள் கொஞ்சம் வேகமாகவும், அதிகளவில் ஆக்ரோஷமாகவும் இருக்கும். சைவ ஜீவராசிகளை உழுதல், வண்டி இழுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்த முடியும். ஆனால், அசைவ ஜீவராசிகளால் இது போன்ற செயல்களில் ஈடுபட முடியாது.
மன இறுக்கம்:
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவதற்கு ஒவ்வொருவரது உடலிலும் ஆபத்தான நேரங்களில் தப்பித்துக் கொள்ள சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.
இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிகளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்திருக்கும். இதனை சாப்பிடும் போது மனிதன் தனது அன்றாட சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் இருப்பது போன்று உணர்கிறான். இதுவே மன இறுக்கமாக மாறுகிறது.
மனிதனுக்கு அதிக சக்தியும், பலமும் அசைவ உணவு சாப்பிடுவதால் கிடைப்பதாக எண்ணுகிறான். ஆனால், உண்மையில் சைவத்தில் தான் அதிகளவில் சக்தியும், பலமும் உள்ளது. உதாரணமாக யானையை குறிப்பிடலாம்.
மேலும், சோயா பீன்ஸில் 40% வரையில் சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது அசைவ உணவை விட இரு மடங்கு அதிகம். இவ்வளவு ஏன் முட்டையில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம்.
இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எப்பொழுதும் மனிதனாகிய நாம் உட்கொள்ள வேண்டியது சைவம் மட்டுமே. ஆரோக்கியமான வாழ்விற்கும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், நோய் நொடியின்றி வாழ ஆசைப்படுகிறான். இதற்கெல்லாம் சைவம் உணவே சிறந்தது.
இதற்கு திருவள்ளுவரின் குறளை உதாரணமாக கூறலாம்…
இதோ….
திருக்குறள்:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
திருக்குறள் பொருள்:
தனது உடம்பும், உடலும் கட்டுடல் மேனியாக வளர வேண்டும் என்பதற்காக ஈவு இரக்கமின்றி பிறிதொரு உயிரை கொன்று குவித்து அந்த உடலின் மாமிசத்தை ஒருவன் உண்டால் என்றால் அவனிடத்தில் எப்படி இரக்கம் இருக்க முடியும்? என்கிறார் திருவள்ளுவர்.