டார்க் சாக்லேட் சாப்பிடுவது எதற்கு நல்லது தெரியுமா?

680

டார்க் சாக்லேட் சாப்பிடுவது எதற்கு நல்லது தெரியுமா?

டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

எப்போதும் சாக்லேட்டை அளவோடு எடுத்துக் கொண்டால் எல்லா விதமான நன்மைகள் கிடைக்கும். சாக்லேட்டுகளில் பினைல் லேத்லமைன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஒருவருக்கொருவர் அன்பை அதிகரிக்கச் செய்கிறது. அதே போன்று ஆனந்தமைடு என்ற பொருள் மகிழ்ச்சியை தூண்டக் கூடியதாக உள்ளது. இவ்வளவு ஏன், சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கொக்கோவில் உள்ள பாலிபினால்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

மற்ற சாக்லேட்டுகளை விட டார்க் சாக்லேட்டுகளில் பிளவனாய்டுகள் அதிகளவில் உள்ளன. இது மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட் ஆகிய இரண்டிலும் பாலிபினால்கள் உள்ளன.

சாக்லேட்டிலிருக்கும் பிளவனாய்டு மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. வயதானவர்கள் சாக்லேட் சாப்பிட்டால் அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. இது தவிர உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க வழிவகை செய்கிறது. டார்க் சாக்லேட் சிறு நீரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.