டீ, காஃபி கட்: எலுமிச்சை சாறு குடிப்பதன் பயன்கள்!

136

காலையில் டீ, காபி கட்: எலுமிச்சை சாறு குடிப்பதன் பயன்கள்!

தினமும் தூங்கி எழுந்ததும் காபி அல்லது டீ குடித்தால் அடுத்த வேலை செய்ய முடியும் என்று இருப்பவர்கள் எத்தனையோ பேர். அதில், சிலர் காலையில் செய்தித்தாள் வாசித்தால் தான் அவர்களுக்கு அன்றைய நாள் நகரும். சரி, காலையில் காஃபியோ அல்லது டீயோ குடித்தால் உடலுக்கு நல்லதா? என்று கேட்டால் இல்லைஎன்று கூட சொல்லலாம்.

மேலும் படிக்க: தாய்ப்பாலுக்கு கூழ் அவசியம்: கூழ் குடிப்பதன் மருத்துவ பயன்கள்!

ஏனென்றால், தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் வாந்தி, மயக்கம், தலை சுற்றல் போன்றவை உருவாவதற்கு முதன்மை காரணமாக விளங்குவதே டீ, காஃபி குடிப்பதால் தான் என்று கூறப்படுகிறது. சரி, இதற்கு பதிலாக என்ன செய்யலாம் என்ற் கேட்குறீங்களா?

உடலுக்கு நல்லதாகவும் இருக்க வேண்டும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், தினமும் காலை எழுந்தவும் இதனை குடித்து வந்தால் போதுமானது. அப்படி எதை சொல்றீங்க என்ரு கேக்குறீங்களா? புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை. மிகவும் எளிமையான ஒன்று தான். அதுதான் எலுமிச்சை சாறு.

இதையும் படிங்க: சாத்தானை வெளியேற்றும் பச்சை கற்பூர பூஜை!

அளவுக்கு அதிகமான உடல் எடையால் அவதிப்படுபவர்கள் டீ, காஃபி குடிப்பதை தவிர்த்து விட்டு தினமும் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் உடல் எடை குறையும். வெந்நீருடன், எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.

இங்கேயும் கிளிக் செய்யுங்க: ஆயக்காரன்புலம் ஸ்ரீ கலிதீர்த்த அய்யனார் கோயில்!

அதோடு ரத்த குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் சீராகும். மேலும், ஊட்டச்சத்து, ஆக்சிஜன் கிடைப்பதால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். செரிமானக் கோளாறு இருக்காது.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயதான தோற்றம் வருவதும் தாமதமாகும்.