டேஸ்டி சைடிஷ் வெஜிடபிள் சப்ஜி செய்யலாம் வாங்க!

227

டேஸ்டி சைடிஷ் வெஜிடபிள் சப்ஜி செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 150 கிராம்
காலிஃபிளவர் -1/2 கப்
உருளைக்கிழங்கு – 1
குடை மிளகாய் – 1
கேரட் – 1
பீன்ஸ் – 5
வெங்காயம் – 3
தக்காளி – 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
சீரகம் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
கஸுரி மேத்தி – சிறிதளவு
பிரெஷ் கிரீம் – 1/2 கப்
பட்டர் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், கேப்ஸிகம் போன்றவற்றை ஒரே மாதிரியான அளவில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பன்னீரை ஒரே மாதிரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். காலிஃபிளவரை அரிந்து அதனை சூடான தண்ணீரில் சேர்த்து 2 நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து அதை தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொண்டு பின் அதில் அரிந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், குடைமிளகாய், காலிஃபிளவர் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி விட்டு பின் அதனை வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் மீண்டும் சிறிது பட்டர் சேர்த்து உருகிய பின்னர் அதில் வெட்டி வைத்துள்ள பன்னீர் சேர்த்து அது நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கி அதையும் எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு, அடுத்தாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கி விட்டு , கரம் மசாலா தூள், கஷ்மீரி மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பின் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள காய்கறி கலவை மற்றும் பன்னீர் சேர்த்து ஒரு முறை பிரட்டி விட்டு பின் அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் வரை தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கலவை கொதித்து கெட்டியாக மாறிய பிறகு, அதில் கஸுரி மேத்தி சேர்த்து பின் இறுதியாக பிரெஷ் கிரீம் (விருப்பப்பட்டால்) சேர்த்தால் சூப்பரான வெஜிடபிள் சப்ஜி ரெடி