தயிருடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது?

157

தயிருடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது?

சாப்பாடு என்று எடுத்துக் கொண்டால் நன்றாக சாப்பிடும் சிலரும், கொஞ்சமாக சாப்பிடும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைவிட சில சாப்பாட்டு பிரியர்களும் இருக்கிறார்கள். எல்லா உணவுகளையும் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எந்தெந்த உணவுகள் எப்போது சாப்பிட வேண்டும், எந்த உணவுகளுடன் எது சேர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரியாது. அதில் தயிர் முக்கியமானது.

சாப்பாட்டில் தயிர் ஊற்றி சாப்பிடும் போது சில உணவுப் பொருட்களை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதையும், மீறி சாப்பிட்டால் அது விஷ உணவாக மாறி ஃபுட் பாய்சனாகிவிடும். தயிர் அளவுக்கு அதிகமாக புரத சத்து இருக்கிறது. இது பழங்கள் சாப்பிட்ட பின்னர் செரிமானத்தினை குறைக்கிறது. மேலும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

அதற்கு பழங்களில் உள்ள அமிலத் தன்மை தான் முக்கியமான காரண்மாகும். நெய், பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றுடன் வாழைப்பழம், கீரை போன்றவைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், இது செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதிலும், இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளவே கூடாது.

சைவ உணவுகளைப் போன்று அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், காடை, மீன் போன்ற எந்தவொரு அசை உணவுகளுடன் தயிர் எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக மீன் – தயிர் காம்பினேசன் கூடவே கூடாது. மீறி சாப்பிட்டால் தோல் வியாதிகளான குஷ்டம் நோய் வரும். தயிரைவிட, மோர் தான் சிறந்தது. காரணம் என்னவென்றால், மோரில் அதிகளவு ஜீரண சக்தி உள்ளது. அதனை எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளின் போது மோர் தான் அதிகளவு பயன்படுத்துவார்கள்.