தாய்ப்பாலுக்கு கூழ் அவசியம்!

193

தாய்ப்பாலுக்கு கூழ் அவசியம்: கூழ் குடிப்பதன் மருத்துவ பயன்கள்!

வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, கூழுக்கு மிஞ்சிய விருந்தும் இல்லை என்று பக்தி படங்களில் வரும் டயலாக், பழமொழி கூட. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சிறுதானியங்களில் தான் உணவு சமைத்து சாப்பிட்டு வந்தனர். சிறுதானியங்களில் ஒன்று தான் கம்பு. இதில் கூழ், களி, முளைக்கவிட்ட பயிர் என்று பக்குவப்படுத்தி நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தனர். அதனால், நோய், நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்.

மேலும் தெரிந்து கொள்ள: உடம்பில் சக்தி வேணுமா, இதை சாப்பிடுங்கள்!

ஆனால், இன்றைய காலகட்டத்தில் அரிசி, கோதுமை என்ற இரண்டை மட்டுமே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சிறுதானியங்களில் ஒன்றான கம்பில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில், 15% புரோட்டீன், வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், அதிகளவில் நார்ச்சத்து போன்றவை உள்ளன. வெயில் காலங்களில் அதிகம் பருகும் இளநீருக்கு அடுத்தபடியாக சிறந்த பானம் எது என்றால் அது கம்மங்கூழ் தான்.

இதையும் படிங்க: சூடுபடுத்தி சாப்பிட்டால் விஷமாக மாறும் உணவுகள்!

  1. தினமும் காலையில், மற்ற உணவுகளுக்குப் பதிலாக கம்மங்கூழ் குடித்து வந்தால் உடலில் வெப்பநிலை சீராக இருக்கும். அதோடு, கெட்ட கொழுப்புகள் சேராமல் கட்டுப்படுத்தப்படும்.
  2. தினமும் அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்குப் பதிலாக கம்பு கூழ், களி, அடை தோசை போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  3. உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, பல நோய்களின் தாக்கத்திலிருந்து கம்மங் கூழ் நம்மை பாதுகாக்கிறது.
  4. மேலும், நார்ச்சத்து அதிகம் கொண்டது என்பதால், செரிமானக் கோளாறும், குடல் புண் போன்றவற்றை எளிதில் குணப்படுத்தும்.
  5. அதிக எடை கொண்டவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்டு வந்தால் உடல் பருமன் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும்.
  6. ஒருவேளையாவது கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கு முதுமை அடையும் தன்மை தாமதப்படும். அதோடு தோல் பளபளப்பாகவும், இளமை தோற்றத்தையும் தரும்.
  7. கம்மங்கூழ் அல்லது களி ஆகியவற்றை உண்ணும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  8. ரத்தத்தை தூய்மைப்படுத்தும் பணியை கம்பு செய்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு முடி கொட்டும் பழக்கம் இருக்கிறது. அதனை சரிசெய்ய கம்பு எடுத்துக் கொண்டு வந்தால் முடி கொட்டுவது நிறுத்தப்படும்.
  9. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப, கம்மங் கூழ் அதிகமாக எடுத்துக் கொண்டால் சில நேரங்களில் அது இருமல், சளி போன்றவற்றை உண்டாக்கும். ஆதலால், அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்…