தினமும் மோரை இப்படி செய்தால் முகப்பரு நீங்குமா?

272

தினமும் மோரை இப்படி செய்தால் முகப்பரு நீங்குமா?

கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க அனைவரும் மோர் அருந்துவது வழக்கம். தினந்தோறும், சாப்பாட்டில் மோர் சேர்த்து சாப்பிட்டு வர உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தடுக்கப்படும். இதனால், உடல் குளிர்ச்சியாகவே இருக்கும். பாலிலிருந்து கிடைப்பது தயிர் என்றால், அந்த தயிரில் தண்ணீர் சேர்த்தால் கிடைப்பது மோர்.

இந்த மோரை தினந்தோறும், குடிப்பதோடு மட்டுமல்லாமல், முகத்தில் பருக்கள் இருக்கும் இடங்களில் தடவி வர வேண்டும். அப்படி தினமும் செய்வதைவிட, ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால் பலன் கிடைக்கும். மேலும், பருக்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மறைந்து முகம் பொலிவு பெறும்.