திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மிளகோரை பிரசாதம் செய்வது எப்படி?

273

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மிளகோரை பிரசாதம் செய்வது எப்படி?

ஒவ்வொரு கோயில்களில் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அரவாணை பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவாரூர் தியாகராஜ பெருமாளுக்கு நெய் முறுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமாக பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் குலசேகரன்படியை தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது என்னவோ தயிர்சாதம் மட்டும்தான்.

சுக்கிரனுக்குரிய ஸ்தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதமாக படைக்கப்படுகிறது. கேரளா மாநிலத்திலுள்ள மகாதேவர் கோயிலில் மூலிகைகளை சாறு பிழிந்து அதனை பாலுடன் கலந்து ஈசனுக்கு படைக்கப்பட்டு அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு இட்லி நைவேத்தியமாக படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள சத்ய நாராயணருக்கு கோதுமை ரவை அல்வா பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. சித்தூர் மாவட்டத்திலுள்ள திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார் கோயிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மிளகோதரை பிரசாதம் கொடுக்கப்படுகிறது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் மோதகம் பிரசாதம் தரப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான பிரசாதம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தப் பதிவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கொடுக்கப்படும் மிளகோரை பிரசாதம் எப்படி செய்வது என்பது குறித்து  பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி – 1 கப்
  2. புளி, எலுமிச்சை – தேவையான அளவு
  3. கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
  4. மிளகு – 2 ஸ்பூன்
  5. தனியா – 2 ஸ்பூன்
  6. நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
  7. வெள்ளை எள் – 2 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை – 2 ஆர்க்குகள்
  9. உப்பு – தேவையான அளவு
  10. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து உதிரியான சாதமாக செய்ய வேண்டும். வெறும் கடாயில், கடலைப்பருப்பு, எள், தனியா, மிளகு சேர்த்து கரகரப்பாக பொடிக்க வேண்டும். இத்துடன் புளி சேர்த்து அரைக்க வேண்டும். சாதத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும். எண்ணெய் சூடாகி கறிவேப்பிலை பொடித்து வைத்தவற்றைச் சேர்த்து கலக்க வேண்டும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மிளகோதரை பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.