தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

122

தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

தொப்பை எளிதாக வந்து விடும். ஆனால், அதனை குறைக்கத்தான் படாதபாடு பட வேண்டியிருக்கும். சிலர், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார்கள், சிலர் இயற்கை உணவு முறைகளை பின்பற்றுவார்கள், இன்னும் சிலர் காலை மற்றும் மாலை என்று தினந்தோறும் நடைபயிற்சி செய்வார்கள். இந்தப் பதிவில் தொப்பையை குறைக்க உதவும் எளிய டிப்ஸ் என்ன என்பது குறித்து பார்ப்போம்…

தொப்பை கொழுப்பை நீக்க இஞ்சி பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி செரிமானத்தை தூண்டுவதோடு, பசியைக் குறைக்கும். இஞ்சி சாறு உடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் வெந்நீர் குடித்து வந்தால் தொப்பை கரைந்துவிடும்.

தொப்பை கொழுப்பை நீக்க எலுமிச்சை பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சையில் அதிகளவு ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதிலும் பயன்படுகிறது. எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலமாக வளர்சிதை மாற்றத்தையும் பெரிதும் அதிகரிக்க முடியும். இதனால், தொப்பை வேகமாக குறையும்.

தொப்பை கொழுப்பை குறைக்க திரிபலாவும் முக்கியமாக பயன்படுகிறது. திரிபலா என்பது ஆயுர்வேதத்தில் உள்ள ஒரு பயனுள்ள மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய 3 மூலிகைகல் சேர்ந்த ஒரு கூட்டுப்பொருள் திரிபலா. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

இது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமின்றி வயிறு தொடர்பான சிக்கல்களை தீர்க்கவும் பயன்படுகிறது. திரிபலாவை பயன்படுத்தினால், தொப்பையை மிக வேகமாக குறைக்கலாம். இது தொப்பை கொழுப்பை கரைப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும் பயன்படுகிறது.