தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட அருகம் புல்!

182

தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட அருகம் புல்!

எல்லாவிதமான மண் வளத்திலும் வளரும் தன்மை கொண்டது அருகம்புல். தன்னிச்சையாய் வயல், வரப்புகள், வெட்ட வெளியிலும் வளரும் புல் வகையைச் சார்ந்ததாகும். சல்லிவேர் முடிச்சுகள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது. அருகம்புல்லை விஷ்ணு மூலி என்று சித்தர்கள் அழைக்கின்றனர். தோல் நோய்களை குணப்படுத்த அருகம்புல் உதவுகிறது.

கண் எரிச்சலையும் சரி செய்கிறது. வயல்வெளி, புல்வெளி பகுதிகளில் வளரும் அருகம் புல் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அருகம் புல் மீது நடந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.

நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம் புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகள் நீங்கும். ஞாபக சக்தியை தூண்டக் கூடியது. அருகம் புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து வெடித்து வந்தால் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும்.

அருகம் புல்லை தயிர் விட்டு அரைத்து அதனை குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும். நோய்கள் அனைத்தையும் நீக்கும் தன்மை கொண்ட அருகம் புல்லானது சித்த, யுனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது.

அருகம் புல் உடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் அவை குணமாகும். அதிக உடல் எடை கொண்டவர்கள், உடல் இளைப்பதற்கு அருகம் புல் சூஸ் குடித்தால் நன்மை உண்டாகும்.

சுத்தம் செய்யப்பட்ட அருகம் புல் சாறு குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறும். அதோடு உடலிலுள்ள தேவையற்ற சதைப்பகுதி குறையும். ரத்தத்தை சுத்தப்படுத்தவும் அருகம்புல் பயன்படுகிறது.

அருகம்புல் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அதனை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கடலை மாவு கொண்டு தேய்த்து குளித்தால் உடல் கண்ணாடி போன்று ஜொலிக்கும்.