நரம்புத் தளர்ச்சி குணமடைய சாப்பிட வேண்டிய பழங்கள்!

516

நரம்புத் தளர்ச்சி குணமடைய சாப்பிட வேண்டிய பழங்கள்!

இன்றைய இளம் தலைமுறையினரை அதிகளவில் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை எது என்றால் நரம்புத் தளர்ச்சி தான். கை நடுக்கம், சோர்வு, தலைவலி, நிலைத்தடுமாற்றம் ஆகிய பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த நரம்புத் தளர்ச்சி பிரச்சனைக்கு அத்திப்பழம், நெல்லிக்காய், பேரீச்சம் பழம், முருங்கைக் கீரை ஆகியவை சிறந்த மருத்துவ காரணியாக பயன்படுகிறது.

பேரீச்சம் பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். நரம்பு பலம் பெறும். எலும்புகள் வலுப்பெறும். பலவீனமான உடல் கூட பேரீச்சம் பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

இரண்டு அல்லது 3 வெற்றிலைகளை நன்கு மென்று சாப்பிட நன்றாக பசியெடுக்கும். செரிமான பிரச்சனை வரவே வராது. உடல் நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை வெற்றிலைக்கு உண்டு.

மாதுளைப் பழம் அதிகம் எடுத்துக் கொண்டால் நரம்புத் தளர்ச்சி பிரச்சனை வராது. மாதுளை பழம் உடல் சூட்டை தணிப்பதோடு, உடலை வலுப்படுத்தவும் செய்கிறது. மேலும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்கிறது. இவ்வளவு ஏன், ஆண்மை பிரச்சனைக்கு மாதுளம் பழம் சிறந்த மருத்துவ காரணியாக பயன்படுகிறது.

அத்திப்பழம் நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தி, நரம்புகளை வலுப்படுத்துகிறது. உடலுக்கு தேவையான பலத்தையும் கொடுக்கிறது. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

உடல் நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை பிரண்டை செடிக்கு உண்டு. பிரண்டையை உடலில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால், நரம்பு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படுகிறது.

உடலை வலுப்படுத்தும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி பிரச்சனை சரியாகும். மேலும், உடலுக்கு எந்த நோயும் வராது.

உடலை வலிமைப்படுத்தும் சக்தி முருங்கைக் கீரைக்கு உண்டு. நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை உண்டு. ஆண்மை பிரச்சனையை சரி செய்கிறது. முருங்கைக் கீரையை சமைத்து சாப்பிடும் போது அதனுடன் முருங்கைப் பூ சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்படும்.