நாகலிங்க பூவின் மருத்துவ குணங்கள்!

199

பல் வலியை குணப்படுத்தும் நாகலிங்க பூ!

பூவுக்குள் லிங்கம் இருப்பது போன்றும், அதனை நாகம் போன்று குடையாக வந்து பிடிப்பது போன்றும் இருக்கும் பூ தான் நாகலிங்க பூ. நாகலிங்க மரத்தின் மீது கொத்து கொத்தாக பூத்திருக்கும் இந்த நாகலிங்க பூவிற்கு அதிக மருத்துவ குணங்கள் உண்டு. அது என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

சிவனின் அம்சமாக இந்தப் பூ காணப்படுகிறது. மென்மையான பூவாக இருந்தாலும், இந்த பூவின் காயின் அமைப்பானது பந்து போன்று இருப்பதால் கேனான் பால் என்று வெளிநாட்டினர் கூறுகின்றனர். இந்தப் பூவின் பழங்கள் கீழே விழுந்து தரையில் படும் போது வெடித்து சிதறும் தன்மை கொண்டுள்ளது. கொள்ளையர்கள் வராமல் பாதுகாக்க பல சிவாலயங்களில் இந்த மரங்கள் தான் வளர்க்கப்படுகின்றன.

இந்த நாகலிங்க பூவானது தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த பூவில், டை ஹைட்ரோ டையாக்சிண்டோலோ குயினாசோலோன், இண்டிகோ இண்டுருபின், டிரிப்டான்ரின் மற்றும் ஐசாடின் ஆகியவை காணப்படுகின்றன.

நாகலிங்க மரத்தின் உலர்ந்த பழங்கள் அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ளது.

நாகலிங்க பூ மருத்துவ குணங்கள்:

  1. விஷ ஜூரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகலிங்க மரத்தின் பட்டை மற்றும் காய் ஆகியவை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
  2. நாகலிங்க மரத்தின் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
  3. மரப்பட்டை மலேரியா சுரத்தை நீக்க உதவுகிறது.
  4. சொரி, சிரங்கு, படர்தாமரை, படை ஆகியவற்றிற்கு நாகலிங்க பூ இலைகளை அரைத்து அதனை தடவி வர குணமாகும்.
  5. நாகலிங்க பூ இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டுள்ளதால், அந்த இலைகளை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறுகளில் உள்ள கிருமிகளை அழித்து பல் வலியை குணப்படுத்துகிறது.
  6. மேலும் பற்கள் சொத்தையாகாமலும் தடுக்கிறது.