நெல்லிக்காய் சாதம் ரெசிபி செய்வது எப்படி?

186

நெல்லிக்காய் சாதம் ரெசிபி செய்வது எப்படி?

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 8, பச்சரிசி – 2 கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க: எண்ணெய் – 2 டீஸ்பூன், துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் – தலா 3 டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்க வேண்டும். நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவிக்கொள்ள வேண்டும். 2 கப் பச்சரிசியுடன் 4 கப் நீர் விட்டு உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு, துருவிய நெல்லிக்காயை வதக்க வேண்டும். இதனுடன் உப்பு சேர்க்க வேண்டும். நெல்லிக்காயின் நீர் வற்றி வதங்கியதும் வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி, வேகவைத்த சாதத்தையும் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும்.

குறிப்பு: ஆடிப்பெருக்கு அன்று இந்த சாதத்தை செய்து படைக்கலாம்.