நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழம்!

161

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழம்!

பலா இனத்தைச் சேர்ந்த ஒரு வகை மரம். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழம் மட்டுமே. ஒரு சில இடங்களில் தான் இது விவசாய முறைப்படி முழுமையாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப் பயிராகவோ அல்லது வீட்டுத் தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது.

பழங்களின் அரசன் என்றும் பலாப்பழம் போற்றப்படுகிறது. பலாப்பழத்தில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்றிகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆசியாவில் பலா பலவாறு உண்ணப்படுகின்றன. பெரும்பாலும் நன்கு பழுத்த பழத்தின் சுவைகள் அப்படியே உண்ணப்படுகின்றன. சிறு காய் மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூட கறியாக சமையல் செய்தோ அல்லது மெல்லிய வறுவல்களாகவோ உண்ணப்படுகின்றன.

மற்ற பழங்களைப் போன்று பலாப்பழத்திலிருந்தும் சாறு, ஐஸ் கிரீம், பழக்கூழ் மற்றும் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. மூளைக்கும், உடலுக்கு அதிக பலத்தைத் தருகிறது. நரம்புகளை உறுதியாக்குகிறது. இரத்தத்தை விருத்தி செய்கிறது. கண்பார்வைக்கு உதவும் வைட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிகளவில் இருக்கிறது.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பலாக்காயை சமைத்துக் கொடுத்தால் நன்றாக் பால் சுரக்கும். பலாக்காயானது உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. பித்த மயக்கம், பித்த வாந்தி, கிறுகிறுப்பு ஆகியவை பலாக்காயை சமைத்து சாப்பிட குணமாகும்.

வெறும் பலாப்பழத்தை மட்டும் சாப்பிடாமல், சிறிது நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு தாகமும் தீரும். எளிதில் ஜீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.

நெய் அல்லது தேன் கலந்து பலாப்பழத்தை சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.