படிக்கட்டு கட்டுவதற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா?

72

படிக்கட்டு கட்டுவதற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா?

ஒவ்வொன்றையும் வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால் நன்மை உண்டாகும். வீட்டில் பூஜையறை, படுக்கையறை, கழிவறை, சாப்பிடும் அறை, சமையலறை என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாஸ்துப்படி அமைப்பது என்பது நல்ல விஷயம். இதையெல்லாம் பார்த்து பார்த்து கட்டிவிட்டு வீட்டிற்கு வாசற்படி மட்டும் என்ன வித்தியாசமாவா கட்டணும். அப்படி இல்லை. வீட்டிற்கு முக்கியமே வாசல்படி தான்.

வாசல்படியை வட்ட வடிவிலோ, நேர் சென்று திரும்பும் வகையில் எப்படி வேண்டுமானாலும் எந்த வடிவில் வேண்டுமானாலும் அமைக்கலாம். அதே போன்று படிக்கட்டை இரும்பு, கான்கிரீட், மரம் என்று எந்தப் பொருள் கொண்டு வேண்டுமென்றாலும் கட்டலாம்.

அதேபோல படிக்கட்டை இரும்பு, மரம், காங்க்ரீட் என எந்த பொருள் கொண்டு வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால், வாஸ்து என்பது படிக்கட்டு எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடிய வேண்டும் என்பதில் தான் இருக்கிறது. வீட்டிற்கு படிக்கட்டை கட்டும் பொழுது வீட்டின் தென் மூலை அல்லது மேற்கு மூலையிலிருந்து கட்டுவது என்பது சிறப்பு. தெற்கு பகுதியிலிருந்து மேல் எழும்புகிறது என்றால், கிழக்கு நோக்கி அமைந்தால் சிறப்பு. அப்படியில்லை என்றால் தெற்கிலிருந்து மேலெழும்பி மேற்கு நோக்கி அமைந்தாலும் சிறப்பு.

இதற்கு மாறாக வடகிழக்கு மூலையில் படிக்கட்டு அமைக்கப்பட்டால் பொருளாதார ரீதியிலான இழப்பையும், தன்மான இழப்பையும் தான் ஏற்படுத்தும்.

எதற்காக படிக்கட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டும்?

வீட்டிற்கு படிக்கட்டு என்பது கீழிலிருந்து அல்லது வெளியிலிருந்து உள்ளே அல்லது மேலே செல்வதற்கான ஒரு கட்டமைப்பு. குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் தம் வாழ்நாளில் மேல் எழுந்து செல்ல வீட்டின் படிக்கட்டு அமைப்பு முக்கியமான ஒன்றாகிறது. படிக்கட்டு கட்டும் போது எப்படி திசையை கவனிக்கிறோமோ அதே போன்று, படிகளின் எண்ணிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

படிக்கட்டு எப்போதும் 5, 11, 17 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் படிக்கட்டை கட்ட வேண்டும். படிக்கட்டின் நிறமானது கருப்பாகவும், சிவப்பாகவும் இருக்க கூடாது. வீட்டிற்குள்ளாக படிக்கட்டு அமைப்பது என்றால், நட்டநடு நடுவில் அமைக்க கூடாது. பூஜையறையின் வாயில்களிலிருந்தும் தொடங்க கூடாது.

படிக்கட்டிற்கு கீழாக கழிவறையோ, சமையலறையோ அமைக்க கூடாது. படிக்கட்டிற்கு கீழ் உள்ள பகுதியை பயன்படுத்த வேண்டும் என்றால், அதனை பொருட்கள் சேமிப்பு கிடங்காக பயன்படுத்தலாம். வீட்டின் மாடிப்பகுதியிலிருந்து கீழேயிறங்கும் படிக்கட்டானது தரை தளத்திற்கும் கீழே ஒரு தளம் இருக்கிறது என்றால், அந்த தரை தளத்திற்கு தொடர்ச்சியாக இந்தப் படிக்கட்டு அமைப்பு இருக்க கூடாது. அந்த தரை தளத்திற்கு தனியாக ஒரு படிக்கட்டு அமைக்க வேண்டும்.

படிக்கட்டானது சுழன்று சுழன்று மேலே செல்லாதவாறு இருக்க வேண்டும். அப்படி சுழன்று சுழன்று மேலே செல்வது போன்று படிக்கட்டு அமைக்கப்பட்டால் அதனால், நோய் நொடிகள் உண்டாகும்.