பப்பாளி சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்!

444

பப்பாளி சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்!

ஏழைகளின் கனி என்றழைக்கப்படுவது பப்பாளி. எளிதில் கிடைக்கும் பழம். விலையும் கொஞ்சம் மலிவானது. எல்லா காலங்களிலும் கிடைக்கும். காயாக இருக்கும் போது பச்சையாகவும், கனிந்திருக்கும் போது மஞ்சள் நிறத்திலும் இருக்கும். கனிந்த பழம் சாப்பிடுவதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கருப்பாக இருந்தாலும், கரு மிளவு போல் இருக்கும்.

பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் சியும் பப்பாளி பழத்தில் உள்ளது. மேலும், 18 வகையான சத்துக்கள் கொண்ட ஒரே பழமாக பப்பாளி திகழ்கிறது. எப்போதும் உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்வது நல்லது. அதோடு, சத்தான உணவுகள் தான் சாப்பிட வேண்டும். காலை, பிற்பகல் மற்றும் இரவில் உரிய நேரத்திற்கு உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சரி, இந்தப் பதிவில் பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மருத்துவ பயன்கள் குறித்தும் பார்ப்போம்…

  1. சிறுநீர்ப்பையில் உள்ள கல்லை கரைக்கவும், பல் தொடர்பான பிரச்சனைக்கும் பப்பாளி பயன்படுகிறது.
  2. ஆண்மை தன்மையை பலப்படுத்தவும், நரம்புகள் பலமடையவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் பப்பாளி பயன்படுகிறது,
  3. குழந்தைகள் பப்பாளி பழம் சாப்பிட்டு வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
  4. குண்டாக இருப்பவர்கள் உடல் மெலிவிற்கு பப்பாளி காயை கூட்டு செய்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
  5. செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு பப்பாளி எடுத்துக் கொள்வது நல்லது.
  6. பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி சரியாகும்.
  7. பப்பாளி பழத்தை கூழாக்கி தேன் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரத்திற்குப் பிறகு சூடான தண்ணீரில் கழுவி வர முகம் அழகு பெறும்.
  8. பப்பாளி காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை எடுத்து அதனை முகத்தில் தேய்த்து வர முகப்பரு சரியாகும்.
  9. தேள் கடிக்கு சிறந்த மருந்து. பப்பாளி விதையை அரைத்து தேள் கடித்த இடத்தில் தடவ விஷம் இறங்கும்.
  10. கல்லீரல் பிரச்சனைக்கும் பப்பாளி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது.