பாரம்பரியமான பரங்கிக்காய் பால் கூட்டு செய்வது எப்படி?
உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தரும் பரங்கிக்காய் சாப்பிடுவது மழைக்காலத்திலும் குளிர் மற்றும் இருமலில் பெரும் நிவாரணம் அளிக்கும். பரங்கிக்காயில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை நோயை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, விரைவாக குணமாக்க உதவுகின்றன.
இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பரங்கிக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன, அவை உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதுமட்டுல்லாமல், பரங்கிக்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டும் அதிகளவில் நிறைந்துள்ளன. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சக்திவாய்ந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பரங்கிக்காய் வைத்து சுவையான பால் கூட்டு செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம் வாருங்கள்…
பரங்கிக்காய் பால் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
• சிறு துண்டுகளாக நறுக்கிய பரங்கிக்காய் – 2 கப்,
• பால் – 1/2 கப்,
• அரிசி மாவு – 1 டீஸ்பூன்,
• உப்பு – 1/2 டீஸ்பூன்,
• சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் (மிகவும் இனிப்பு பிடித்திருந்தால் மேலும் சேர்க்கவும்),
• மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
• சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்,
• பச்சை மிளகாய் – 1 துண்டு (விரும்பினால்),
• துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்,
• தண்ணீர் – தேவையான அளவு.
தாளிக்க:
• தேங்காய் எண்ணெய் அல்லது நெய் – 2 டீஸ்பூன்,
• கடுகு – 1/4 டீஸ்பூன்,
• உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
• கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை விளக்கம்:
• முதலில் பரங்கிக்காயை அதாவது (மஞ்சள் பூசணிக்காயை) தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு, மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
• மென்மையாக இருக்கும் வரை சமைக்கவும், ஆனால் குழைந்து விடக் கூடாது.
• அரிசி மாவை பாலில் கரைத்து அதனுடன் சேர்க்கவும். சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்க்கவும். சர்க்கரை தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
• தேவையான நிலைத்தன்மையைப் பெற மெதுவாக கலந்து தண்ணீர் சேர்க்கவும். பின்னர் தாளிப்பிறகு ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும்.
• இப்போது பாரம்பரிய மற்றும் தனித்துவமான பரங்கிக்காய் பால் கூட்டு சுவைக்கத் தயார்.