பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

375

பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பாகற்காயை கண்டாலே குழந்தைகள் பயந்து ஓடுவார்கள். அதனால், அவர்களுக்கு பிடித்த இட்லி, தோசை, சப்பாத்தி, சிக்கன், மட்டன், மீன் குழம்பு, ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் என்று தான் பலரும் சமையல் செய்து கொடுப்பார்கள். ஆனால், பாகற்காயை மட்டும் பயன்படுத்தவே மாட்டார்கள்.

நம், முன்னோர்கள் பாகற்காய் வைத்து பொரியல், குழம்பு என்று சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். அதிகளவில் கசப்பு தன்மை கொண்டதால், பாகற்காயை யாரும் விரும்புவதில்லை. உண்மையில், உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கும் தன்மை பாகற்காய்க்கு உண்டு.

பாகற்காயில் புரதம், கொழுப்பு, தாது உப்புகள், கால்சியம்,  நீர்ச்சத்து, இரும்புத் தாது, வைட்டமின் என்று எல்லா வகையான சத்துகளும் அடங்கியுள்ளன. இப்படி, பல சத்துக்கள் நிறைந்த பாகற்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  1. உடம்பில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை வழங்குகிறது.
  2. பாகற்காய் கசப்பு தன்மை கொண்டதால், உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்க பயன்படுகிறது.
  3. வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்க உதவுகிறது.
  4. கல்லீரலில் உள்ள வீக்கத்தை சரி செய்ய பாகற்காய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
  5. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாகற்காய் சாப்பிட்டு வந்தால், அந்த நோய் முற்றிலும் குணமாகும்.
  6. கல் அடைப்பு மற்றும் மூல நோய் உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் அந்த நோய் சரியாகும்.