பாதாம், பிஸ்தாவைவிட நிலக்கடலை சிறந்தது!

421

பாதாம், பிஸ்தாவைவிட நிலக்கடலை சிறந்தது!

நிலக்கடையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், இனப்பெருக்கம் உடனடியாக நடக்க உதவுகிறது. பெண்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பை சீராக இயங்குவதுடன் கர்ப்பப்பை கட்டிகள், நீர்க்கடிகள் ஏற்படாமல், குழந்தைப் பேறு கிடைக்க நிலக்கடலை உதவுகிறது.

நீரழிவு நோயை தடுக்கும்:

  1. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகளவில் உள்ளது.
  2. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.
  3. பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்கும்.

பித்தப்பை:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் சாப்பிட்டு வந்தால் பித்தப் பை கல் உருவாவதைத் தடுக்கும்.

இதயம்:

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடுவது கட்டுக்குள் இருக்கும். நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுகாக்க உதவுகிறது.

இளமையை பராமரிக்கும்:

நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடெண்ட் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இளமையை பராமரிக்கவும் நிலக்கடலை பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலையில் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடலையில் உள்ள பரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தை போக்கும் ஒரு நல்ல மருந்தாக நிலக்கடலை பயன்படுகிறது.

கொழுப்பை குறைக்கும்:

நிலக்கடலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு குறையும். நிலக்கடலையிலுள்ள தாமிரம், துத்தநாக சத்து ஆகியவை நமது உடலின் நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கு நிலக்கடலை பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டி உண்டாவதை தடுக்கிறது. நிலக்கடலையில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின்கள் ஆகியவை அதிகம் உள்ளது. இது பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதை தடுக்கிறது.

பாதாம், பிஸ்தா:

நிலக்கடலையில் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு ஆகியவை விட அதிக சத்து நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் நிலக்கடலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.