பிரியாணி இலையில் இப்படியொரு மருத்துவ குணம் இருக்கிறதா?

250

பிரியாணி இலையில் இப்படியொரு மருத்துவ குணம் இருக்கிறதா?

பொதுவாக ஒவ்வொரு இயற்கை மூலிகைக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கும். இவ்வளவு ஏன், நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், கடுகு, சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம் என்று எது எடுத்துக் கொண்டாலும் அதில் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. இதில் ஒன்று தான் பிரியாணி இலை. நாம், பிரியாணி செய்வதற்கும், சமையல் மணமணப்பாக இருக்கவும் குழம்பில் பிரியாணி இலை பயன்படுத்துவோம்.

இந்த பிரியாணி இலையில், என் சைம்ஸ் என்ற புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடண்டுகள், மாங்கனீசு, செலினியம் ப்ளேவோனாய்டுகள் என்று அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

என்சைம்ஸ் என்கிற புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள், செலினியம், ப்ளேவோனாய்டுகள் மற்றும் மாங்கனிசு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இந்த பிரியாணி இலையில் நிறைந்து இருக்கிறது.

மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பாதிப்பால் அவதிப்படுபவர்கள், இந்த பிரியாணி இலை சேர்த்து தயாரித்த தேநீர் குடித்து வந்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனை சரியாகும்.